twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடைசியா ஒரு முறை அப்பா முகத்தை பார்க்க முடியலையே.. மகள் இல்லாமல் தகனம் செய்யப்பட்ட ரிஷி கபூர் உடல்!

    |

    சென்னை: ரிஷி கபூரின் உடல் அவரது மகள் ரித்திமா இல்லாமலேயே தகனம் செய்யப்பட்டது.

    Recommended Video

    Rishi Kapoor demise shook the nation and Bollywood

    பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் இன்று காலை மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார் ரிஷி கபூர்.

    உடல் நலக் குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நேற்று இர்பான் கான் அகால மரணமடைந்த நிலையில் இன்று ரிஷி கபூர் மரணம் அடைந்தது பாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ரிஷி கபூரின் உடல் மும்பையில் தகனம்.. அனில் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை! ரிஷி கபூரின் உடல் மும்பையில் தகனம்.. அனில் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை!

    போலீஸார்

    போலீஸார்

    அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சுறுத்தலால் ரிஷி கபூரின் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்லாமல் மருத்துவமனையில் இருந்து நேரடியாக மயானத்திற்கு கொண்டு செல்லுமாறு மும்பை போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர்.

    உடல் தகனம்

    உடல் தகனம்

    இதனை தொடர்நது பிற்பகலில் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் அருகில் உள்ள சந்தவன்வாடி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதில் ரிஷி கபூரின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றனர்.

    டெல்லியில் மகள்

    டெல்லியில் மகள்

    ஆனால் ரிஷி கபூரின் அன்புக்குரிய அவரது ஒரே மகளான ரித்திமா பங்கேற்க முடியவில்லை. ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர், தனது கணவர் பரத் சஹ்னி மற்றும் மகள் சமராவுடன் டெல்லியில் வசித்து வருகிறார். தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மும்பை செல்ல வேண்டும் என்று அவர் டெல்லி போலீஸாரிடம் அனுமதி பெற்றார்.

    மகள் இல்லாமலே

    மகள் இல்லாமலே

    ரித்திமா விமானம் மூலம் மும்பை செல்வதாக தகவல் வெளியானது. ஆனால் அவருக்கு சாலை மார்க்கமாக செல்லவே அனுமதி வழங்கப்பட்டதால் டெல்லியில் இருந்து 1400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மும்பைக்கு செல்ல 18 மணி நேரம் ஆகும் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ரிஷி கபூரின் மகள் இல்லாமலே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    English summary
    Rishi Kapoor's daughter Riddhima, couldn't attend her father funeral. Riddhima lives in New Delhi, has been given permission to drive to Mumbai - the 1,400 km journey will take her about 18 hours. The funeral proceeded without her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X