»   »  பத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒன்னு: நடிகையை பற்றி இப்படி சொன்ன சீனியர் நடிகர்

பத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒன்னு: நடிகையை பற்றி இப்படி சொன்ன சீனியர் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது மகனும், நடிகருமான ரன்பிர் கபூரின் முன்னாள் காதலி கத்ரீனா கைஃபின் பெயர் தனக்கு தெரியாது என்று பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும், நடிகை கத்ரீனா கைஃபும் ஆண்டுக் கணக்கில் காதலித்து பிரிந்துவிட்டனர். ஒரே வீட்டில் தங்கியிருந்த அவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் ரன்பிரின் காதல் வாழ்க்கை பற்றி அவரின் தந்தையும், நடிகருமான ரிஷி கபூர் பேசியுள்ளார்.

சிகரெட்

சிகரெட்

என் மகனும், நானும் சேர்ந்து மது அருந்துவோம். ஆனாலும் அவன் என் முன்னால் தம்மடிக்க மாட்டான். எல்லாம் என் மீது உள்ள மரியாதை தான். நானும் என் தந்தை முன்பு தம்மடித்தது இல்லை என்றார் ரிஷி.

காதலிகள்

காதலிகள்

என் மகனின் காதல் வாழ்க்கையில் நான் தலையிடுவது இல்லை. அவனின் காதலிகள் பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார் ரிஷி கபூர்.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

என் மகன் தனது காதலிகளை வீட்டிற்கு அழைத்து வருவான். ஒரு முறை அவன் வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். அப்போது அவனுடன் அவனது காதலி தங்கியிருந்தார். அந்த பெண் பெயர் தெரியவில்லை. அவரும் அவனின் காதலிகள் ஒருவர் என்று ரிஷி தெரிவித்தார்.

ஜக்கா ஜசூஸ்

ஜக்கா ஜசூஸ்

ரன்பிர் கபூர், கத்ரீனா கைஃப் நடித்துள்ள ஜக்கா ஜசூஸ் படத்தை அவர்கள் இருவரும் சேர்ந்து விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ரிஷி கத்ரீனாவின் பெயர் தெரியாது என்று கூறியுள்ளார்.

ரிஷி

ரிஷி

ரிஷி கபூருக்கும், அவரின் மனைவி நீத்துவுக்கும் கத்ரீனாவை சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. கத்ரீனா மட்டும் அல்ல ரன்பிரின் முந்தைய காதலி தீபிகா படுகோனேவும் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rishi Kapoor talks about Ranbir's live-in relationship Rumours have been always rife that Ranbir Kapoor's parents (Rishi Kapoor and Neetu Kapoor) never accepted Katrina Kaif as their 'bahu' and apparently, it's one of the main reasons, why they aren't together today! Recently Rishi Kapoor made some shocking revelations about Ranbir Kapoor and Katrina kaif's live-in relationship.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil