»   »  'பின்' போட்டு விளம்பரம் செய்தும் நர்கிஸின் படம் பப்படமாகிடுச்சே!

'பின்' போட்டு விளம்பரம் செய்தும் நர்கிஸின் படம் பப்படமாகிடுச்சே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரித்தேஷ் தேஷ்முக், நர்கிஸ் ஃபக்ரி நடிப்பில் இன்று வெளியான பாஞ்சோ படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது.

ரவி ஜாதவ் இயக்கத்தில் நடிகை ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக், நர்கிஸ் ஃபக்ரி நடித்த பாஞ்சோ பாலிவுட் படம் இன்று ரிலீஸானது. படத்தை ரித்தேஷும், நர்கிஸும் பலமாக விளம்பரம் செய்தனர்.

Riteish, Nargis starrer Banjo fails to impress audience

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளம்பரம் செய்ய சென்றபோது நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நர்கிஸின் உடையில் முன்னழகு அதிகமாக தெரிவதாகக் கூறி பின் போடுமாறு வற்புறுத்தினர். முதலில் முடியாது என்ற அவரும் பின்னர் வேறு வழியில்லாமல் பின் போட்டார்.

இப்படி அவர்கள் விளம்பரம் செய்த படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. கதை நன்றாகத் துவங்கி புஸ்ஸாகிவிட்டது என்று விமர்சனம் வந்துள்ளது. ரித்தேஷ் தேஷ்முக் உடம்பை கும்மென்று ஆக்கி, முடியை வளர்த்து கெட்டப்பை மாற்றியது வீணாகிவிட்டது.

கதை இழு இழு என இழுத்ததில் ரசிகர்கள் எப்படா தியேட்டரை விட்டு வெளியே வருவோம் என்று துடித்ததாக விமர்சனம் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் ஒரு ராசி உள்ளது. ஷாருக்கானின் படங்களை விமர்சகர்கள் துப்புவார்கள், ரசிகர்கள் ஹிட்டாக்குவார்கள். யார் கண்டது பாஞ்சோவுக்கு அந்த ராசி ஏற்டலாம்.

English summary
Ritiesh Deshmukh, Nargis Fakhri starrer Banjo which hit the screens today has failed to impress the audience.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil