»   »  சிவலிங்கா ரீமேக்: லாரன்ஸுக்கு ஜோடியான 'பாக்ஸர்' ரித்திகா!

சிவலிங்கா ரீமேக்: லாரன்ஸுக்கு ஜோடியான 'பாக்ஸர்' ரித்திகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவலிங்கா படத்தின் தமிழ் ரீமேக்கில் ரித்திகா சிங் நாயகியாக நடிப்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சிவலிங்கா படத்தை தமிழில் பி.வாசு இயக்குகிறார்.இதில் நாயகனாக லாரன்ஸ் நடிக்க அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்பட்டது.

Ritika Singh Pair with Raghava Lawrence

ஆனால் அனுஷ்கா தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்க, தற்போது அவருக்குப் பதிலாக 'இறுதிச்சுற்று' ரித்திகா சிங்கை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் பி.வாசு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் '' இந்த மாதிரி படங்களில் நடிக்காத ஒருவரைத் தேடி வந்தேன். இறுதிச்சுற்று படத்தில் ரித்திகாவின் நடிப்பு எனக்குப் பிடித்திருந்தது.

இறுதிச்சுற்று ரித்திகாவின் முதல் படம் என்றே நம்ப முடியவில்லை. அந்தளவு சிறப்பாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் என்பதால் எனது படத்திற்கு இவர் சரியாக இருப்பார் என்று முடிவு செய்தேன்.

இந்தப் படத்திற்காக ரித்திகாவைத் தேர்வு செய்தபோது லாரன்ஸ் ஒரு சிறந்த நடனக் கலைஞர், எனவே அதற்கேற்றவாறு உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் என்று கூறினேன்.

அதற்கு ரித்திகாவும் ஒப்புக் கொண்டுவிட்டார்'' என்று கூறியிருக்கிறார். தமிழிலும் இப்படத்திற்கு சிவலிங்கா என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறுகின்றனர்.

நடிகர் சக்தி வாசு இப்படத்தில் முக்கிய வேடமேற்று நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 14 ம் தேதி பெங்களூரில் துவங்குகிறது.

English summary
Ritika Singh Team Up with Lawrence for his Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil