»   »  அ..ஆ.. இ.. ஈ... ரித்திகா சிங்கின் 'தமிழ்' வாத்தியாராக மாறிய விஜய் சேதுபதி!

அ..ஆ.. இ.. ஈ... ரித்திகா சிங்கின் 'தமிழ்' வாத்தியாராக மாறிய விஜய் சேதுபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் கற்றுக் கொள்வது எப்படி என விஜய் சேதுபதி தனக்கு டிப்ஸ் வழங்கியதாக நடிகை ரித்திகா சிங் கூறியிருக்கிறார்.

இறுதிச்சுற்று படத்துக்குப்பின் ஆண்டவன் கட்டளை படத்தில் ரித்திகா சிங் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தை காக்கா முட்டை புகழ் மணிகண்டன் இயக்கி வருகிறார்.


Ritika Singh Talks about VIjay Sethupathi

இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியைப் பார்த்து தன் மிகவும் பயந்ததாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் ''விஜய் சேதுபதி மிகவும் அமைதியாக இருந்ததால் ஆரம்பத்தில் பயந்தேன்.


ஆனால் போகபோக அவரின் கலகலப்பான குணம் குறித்துத் தெரிந்து கொண்டேன்.தமிழ் கற்றுக் கொள்வது குறித்து எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.


அவர் கூறியதுபோல சப்-டைட்டில் இல்லாத தமிழ்ப்படங்களை பார்த்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.தற்போது நான் வேகமாக தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் விஜய் சேதுபதிதான் என்று அவருக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.


ஆண்டவன் கட்டளை படத்துக்குப்பின் மீண்டும் ஒரு நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

English summary
''Vijay Sethupathi give some tips for How Learn Tamil'' Actress Ritika Singh says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil