»   »  தல 57: அஜீத்துடன் இணைந்து நடிக்கும் ரித்திகா சிங்?

தல 57: அஜீத்துடன் இணைந்து நடிக்கும் ரித்திகா சிங்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 படத்தில் அஜீத்துடன் இணைந்து ரித்திகா சிங் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுத்தை சிவா-அஜீத் 3 வது முறையாக இணைந்திருக்கும் தல 57 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது. 9 வருடங்கள் கழித்து அஜீத் இதில் இரட்டை வேடங்களில் நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

Ritika Singh Team up with Ajith

இந்நிலையில் 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகா சிங் இப்படத்தில் அஜீத்துடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் அனுஷ்கா இப்படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அனுஷ்காவுடன் இணைந்து ரித்திகா சிங்கும் நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

மற்றொருபுறம் சந்தானத்திற்குப் பதில் கருணாகரனை, சிறுத்தை சிவா காமெடியனாக நடிக்க வைக்கப் போவதாகவும் தகவல்கள் அடிபடுகின்றன.

அனிருத் இசையமைக்கிறார் என்பது தவிர மற்ற தகவல்கள் எதுவும் உறுதியாகவில்லை. படப்பிடிப்புக்கு முன்பாவது இப்படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் குறித்த விவரங்களை படக்குழு வெளியிடுமா? பார்க்கலாம்.

English summary
Thala 57: Sources Said Actress Ritika Singh Team Up with Ajith for His Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil