twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நானும், ராஜசேகர் அப்பாவும் நண்பர்கள்தான், நில மோசடி வழக்கை சந்திப்பேன்.. நடிகர் ரித்தீஷ்

    By Sudha
    |

    அருப்புக்கோட்டை: என் மீது வேண்டும் என்றே நில மோசடி பொய் வழக்கைப் போட்டுள்ளனர். வழக்கைப் போட்டுள்ளவர் எனது நண்பர்தான். இந்த வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன் என்று கூறியுள்ளார் 'பொழுதன்னிக்கும்' வன்முறை, கலாட்டா, அடிதடி உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கி கோர்ட்டுக்கும், வீட்டுக்குமாக நடந்து கொண்டிருக்கும் திமுக எம்.பியும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ்.

    நடிகர் ரித்தீஷ் மீது அடிக்கடி வழக்குகள் பாய்ந்து வருகின்றன. அவரும் சும்மா இருப்பதில்லை. ஏதாவது வம்பிழுத்து சண்டைக்குப் போய் விடுகிறார். சமீபத்தில் கூட, பசும்பொன்னில் நடந்த முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவின்போது, அஞ்சலி செலுத்துவதற்காக வந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகனை வரவேற்பது மற்றும் வழியனுப்புவது தொடர்பாக ரித்தீஷ் கோஷ்டியினருக்கும், சுப. தங்கவேலன் கோஷ்டியினருக்கும் இடையே செமத்தியான சண்டை நடந்தது. ஆளாளுக்கு அடித்துக் கொண்டனர், வெட்டு விழுந்தது, ரத்தக் களறியானது.

    தேவர் நினைவிடத்தில் அன்பழகன் மலர் வளையம் வைத்துவிட்டு சென்னை செல்லும் முன் அருப்புக்கோட்டையில் பைபாஸ் ரோட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நூற்பு மில்லில் மதிய உணவிற்கு வந்தார். அப்போது சுப.தங்கவேலன், ரித்தீஷ் எம்.பி. கோஷ்டிகளுக்கு இடையே பெரும் மோதல் மூண்டது.

    இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், ரித்தீஷ். அவரது உதவியாளர் நாகராஜன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி, பொது சொத்தை சேதப்படுத்துவது உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் ரித்தீஷ் மற்றும் உதவியாளர் நாகராஜ் இருவரும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமீன் பெற்றனர். அதனைத் தொடர்ந்து இருவரும் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு சரணடைந்தனர். பின்னர் இருவரும் தனித்தனியே இரு நபர் ஜாமீன் பெற்றுச் சென்றனர்.

    இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜசேகர் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், என் தந்தை முருகேசனிடம் 20 கோடி ரூபாய்க்கு இடம் வாங்கித் தருவதாக எம்.பி. ரித்தீஷ் பணம் பெற்றுக் கொண்டு இடம் வாங்கித் தரவில்லை. வேறு இடம் வாங்கித் தருவதாக கூறியிருந்தார். ஆனால் வேறு இடமும் வாங்கித் தரவில்லை. ரூபாயும் திருப்பித் தரவில்லை என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து அருப்புக்கோட்டைக்கு வந்த ரித்தீஷிடம் என்ன விஷயம் என்று கேட்டபோது, நானும், ராஜசேகர் தந்தை முருகேசனும் நெருங்கிய நண்பர்கள். பல கோடி ரூபாய்க்கு இருவரும் சேர்ந்து தொழில் செய்துள்ளோம். தற்போது இடப் பிரச்சினையில் சில குளறுபடி இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. அதனை காரணம் காட்டி சிலரின் தூண்டுதலின் பேரில் ராஜசேகர் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். அதனை சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கை சந்திப்போம் என்றார் ரித்தீஷ்.

    English summary
    Another has been slapped against DMK MP and actor J K Ritish. He said that he will face the case legally.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X