»   »  'ராம் கோபால் வர்மா.. நெருப்புடா டீசர் பாத்துட்டீங்களா... உங்க ட்விட்டர் கணக்கை அழிச்சிடுங்க!'

'ராம் கோபால் வர்மா.. நெருப்புடா டீசர் பாத்துட்டீங்களா... உங்க ட்விட்டர் கணக்கை அழிச்சிடுங்க!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியை சீண்டிய இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு, நடிகர் ஆர் ஜே பாலாஜி பதிலடி கொடுத்த விதம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.

சமீபத்தில் டோலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன், ரஜினியை ஒப்பிட்டுக் கிண்டல் செய்திருந்தார்.


RJ Balaji Advice to Ram Gopal Varma

இதனைப் பார்த்த இயக்குநர் வெங்கட் பிரபு, தனுஷ் உட்பட ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ராம் கோபால் வர்மாவை தாளித்துக் கொட்டினர்.


இந்நிலையில் நடிகர் ஆர்ஜே பாலாஜி, இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு நேற்று வெளியான நெருப்புடா டீசர் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.


இதுகுறித்து அவர் '' ராம் கோபால் வர்மா சார் நெருப்புடா டீசர் பார்த்தவுடனே நீங்க 3 விஷயம் செய்யுங்க. 1. உங்களோட கருத்துக்கு மன்னிப்புக் கேளுங்க. 2.உங்க ட்விட்டர் அக்கவுண்டை அழிச்சிடுங்க.


3. அமிதாப் பச்சன் சார்கிட்ட கபாலி படத்தோட முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் வாங்கித் தரச்சொல்லி படத்தைப் பாருங்க'' என்று கூறியிருக்கிறார்.தற்போது ஆர்ஜே பாலாஜியின் இந்த ட்வீட்டை ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.


நெருப்புடா டீசர் குறித்து ஆர்ஜே பாலாஜி ''473 முறை இந்த டீசரை பார்த்து விட்டேன். தலைவரோட வாய்ஸ் மற்றும் ஸ்டைலை யாரும் அடித்துக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்திருக்கிறார்.


நேற்றிரவு வெளியான நெருப்புடா டீசரை இதுவரை 10 லட்சம் பேர் இணையத்தில் பார்த்து ரசித்திருக்கின்றனர்.English summary
After watching Neruppu Da Teaser Actor RJ Balaji Replied Ram Gopal Varma Comment.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil