»   »  லட்சுமி ராமகிருஷ்ணன் அவ்வளவு திட்டியும் கண்டுக்காத ஆர்.ஜே.பாலாஜி

லட்சுமி ராமகிருஷ்ணன் அவ்வளவு திட்டியும் கண்டுக்காத ஆர்.ஜே.பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் நிகழ்ச்சியை கலாய்த்த ஆர்.ஜே. பாலாஜியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவ்வளவு திட்டியும் அவர் கண்டுகொள்ளாமல் அமைதி காத்து வருகிறார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் கடவுள் இருக்கான் குமாரு.

இந்த படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பேசுவதெல்லாம் உண்மை என்ற பெயரில் கலாய்த்துள்ளார்.

திட்டு

திட்டு

பாலாஜி தனது நிகழ்ச்சியை கலாய்த்த செய்தி அறிந்த லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் அவருக்கு லெப்ட் அன்ட் ரைட் கொடுத்துவிட்டார். கோபத்தில் பொங்கிய அவரை பலர் சமாதானம் செய்ய வேண்டியதாகிவிட்டது.

பாலாஜி

பாலாஜி

தான் படத்தில் செய்த வேலையால் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னை ட்விட்டரில் அவ்வளவு திட்டியும் பாலாஜி அதற்கு பதில் ட்வீட்டே போடவில்லை. இதுவரை எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து வருகிறார்.

லட்சுமி

லட்சுமி

தான் திட்டி ட்வீட் போட்டதும் பதிலுக்கு பாலாஜி ஏதாவது ட்விட்டரில் போடுவார் என்று எதிர்பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. பாலாஜி இது வரை ட்விட்டரில் லட்சுமிக்கு பதில் தெரிவிக்கவில்லை.

கோழை

பாலாஜி அமைதியாக இருப்பதை பார்த்த லட்சுமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அமைதி காப்பது அறிவாளித்தனம் அல்ல. என்னை பொறுத்த வரையில் அது கோழைத்தனம், பாசாங்கு செய்வது @RJ_Balaji

English summary
Actor RJ Balaji has not replied to actress Lakshmi Ramakrishnan who blasted him for making fun of her TV programme in the movie Kadavul Irukkan Kumaru.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil