ரசிகர்கள் வீட்டுக்கு திடீரென போன் செய்து அதிர்ச்சி கிளப்பிய ஆர்.ஜே.பாலாஜி.. என்னவொரு வில்லத்தனம்!

சென்னை: ஆர்ஜே வாக இருந்த போது கிராஸ் டாக் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்ஜே பாலாஜி.

கடந்த 2013ம் ஆண்டு வெளியான புத்தகம் படத்தில் ஆர்ஜே பாலாஜியின் வாய்ஸ் மட்டுமே இடம்பெற்றிருந்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் ஆர்ஜே பாலாஜியாகவே சின்னதாக ஒரு கேமியோ ரோலில் வந்து சென்றார்.

அதன் பின்னர் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் தான் காமெடி ரோலில் நடித்து கலக்கினார் ஆர்ஜே பாலாஜி.

ஆர்ஜே பாலாஜி

ஆர்ஜே பாலாஜி

92.7 பிக் எஃப்.எம்மில் ஆர்ஜேவாக பணியாற்றிய பாலாஜி இன்னமும் ஆர்ஜே பாலாஜியாகவே ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார். 21 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட அவருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஹீரோவான பின்னரும் இன்னமும் ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் கமெண்ட்டரி கொடுத்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி.

காமெடியனாக

காமெடியனாக

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் கர்ணா எனும் கதாபாத்திரத்தில் காமெடியனாக அறிமுகமானார். வடகறி, இது என்ன மாயம் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்தாலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் இவரது காமெடி டைமிங் வேற லெவலில் வொர்க்கவுட் ஆகியிருக்கும். மேலும், அந்த படம் இவரை அடுத்த கட்டத்திற்கும் நகர்த்தியது என்றும் சொல்லலாம்.

ஹீரோ பாலாஜி

ஹீரோ பாலாஜி

ஸ்பைடர், இவன் தந்திரன் என பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆர்ஜே பாலாஜியாகவும், காமெடியன் பாலாஜியாகவும் இருந்தவர் அந்த படத்திற்கு பிறகு ஹீரோ பாலாஜியாக மாறினார். நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்திலும் இவர் தான் ஹீரோ. நாளை வெளியாகவுள்ள் வீட்ல விசேஷம் படத்திலும் ஆர்ஜே பாலாஜி தான் ஹீரோ.

Recommended Video

RJ Balaji நடிப்பில் doctorate வாங்கணும்|KS Ravikumar Veetla Vishesham Movie Audio Launch *Kollywood
ரசிகர்களுக்கு அதிர்ச்சி

ரசிகர்களுக்கு அதிர்ச்சி

இந்நிலையில், வீட்ல விசேஷம் படத்தின் புரமோஷனுக்காக மீண்டும் கிராஸ் டாக்கை கையில் எடுத்த ஆர்ஜே பாலாஜி சில அப்பா ரசிகர்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் போன் போட்டு, உங்க அம்மா கர்ப்பமாக இருக்காங்கன்னு வீட்ல விசேஷம் படத்தில் வரும் கதையை அளந்து விட அவர்கள் ஒவ்வொருவரும் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள் வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது. சிலர் வேண்டாம் என்று சொல்வதும், சிலர் சந்தோஷப்பட்டு பிராங்க் கால் என்பதால் ஏமாந்து போவதுமாக உள்ளது.

புதிய ஐடியா

தனது படத்திற்கான புரமோஷனுக்காக பல கோடிகளை செலவு செய்து பல ஊர்களுக்கு சுற்றி வராமல், உட்கார்ந்த இடத்திலேயே தனது டிரேட்மார்க்கான பிராங் காலை பயன்படுத்தி ஆர்ஜே பாலாஜி செய்துள்ள புதிய புரமோஷன் யுக்தி அனைவராலும் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. சில ரசிகர்கள் அந்த போன் காலை உண்மையென நம்பி அப்பாவுடன் சண்டை போடுவதெல்லாம் வேற லெவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X