தரமான படைப்புகளை கொடுத்த இயக்குனருடன் இணையும் RJ பாலாஜி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

சென்னை: இயக்குனர், ஹீரோ, காமெடியன், வர்ணனையாளர் என பன்முகம் கொண்டவர் RJ பாலாஜி.

ரேடியோ ஜாக்கி, சினிமா, கிரிக்கெட் வர்ணனை என ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார் RJ பாலாஜி.

தற்போது RJ பாலாஜி நடிக்கவுள்ள புது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களை ஈர்த்தார்

ரசிகர்களை ஈர்த்தார்

காமெடியனாக நடிக்க தொடங்கிய RJ பாலாஜி LKG படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அரசியல் கதையை கொண்ட LKG பெரிய அளவில் வெற்றி பெற, அதையடுத்து கடவுள் பெயரை பயன்படுத்தி கொள்ளை அடிப்பவர்களை சுட்டிக்காட்டும் வகையில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது

அடுத்த திரைப்படம்

அடுத்த திரைப்படம்

RJ பாலாஜி ஹீரோவாக நடித்த இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக Badhai Ho எனும் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். அமித் ஷர்மா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான Badhai Ho பாலிவுட்டில் பெரிய வெற்றி பெற்று குறிப்பிடத்தக்கது.

தரமான படைப்புகள்

தரமான படைப்புகள்

தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி சிறந்த இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ராம்.

தங்க மீன்கள், கற்றது தமிழ், தரமணி மற்றும் பேரன்பு போன்ற அருமையான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கியுள்ளார். ராமின் படங்கள் வசூல் ரீதியாக பேச படவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

ரசிகர்களின் விருப்பம்

ரசிகர்களின் விருப்பம்

ராமின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்த நிலையில் முதலில் சிம்புவுடன் இணைகிறார் என்று சொல்லப்பட்டது. பின்னர் நிவின் பாலி உடன் இணைகிறார் என்றும் சொல்லப்பட்டது. அந்த வரிசையில் RJ பாலாஜி தான் ராமின் அடுத்த படத்தின் கதாநாயகன் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமின் அடுத்த படம் எந்த நடிகருடன் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X