»   »  கடவுள் இருக்கான் குமாரில் ஸ்ருதியை கலாய்த்த ஆர்.ஜே. பாலாஜி

கடவுள் இருக்கான் குமாரில் ஸ்ருதியை கலாய்த்த ஆர்.ஜே. பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஆர்.ஜே. பாலாஜி ஸ்ருதி ஹாஸனை கலாய்த்துள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

RJ Balaji makes fun of Shruti Haasan in #KIK

படத்தில் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜீத், விஜய், தனுஷ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என பலரையும் சகட்டு மேனிக்கு கலாய்த்திருக்கிறார்கள்.

ஒரு காட்சியில் ஆர்.ஜே. பாலாஜி ஸ்ருதி ஹாஸனை கலாய்த்துள்ளார். மலர் டீச்சரை(சாய் பல்லவி) எதிர்பார்த்தால் ஸ்ருதி ஹாஸன் வருவது இல்லையா என கலாய்த்துள்ளார் பாலாஜி.

பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்த ஸ்ருதி ஹாஸனை தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மரண கலாய் கலாய்த்தனர். ஆனால் தெலுங்கு ரசிகர்களோ ஸ்ருதியை மலர் டீச்சராக ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
RJ Balaji has made fun of Shruti Haasan in Kadavul Irukkan Kumaru that hit the screens on friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil