»   »  அப்படியே கனவு போல இருக்கு பாஸ்.. "மணி" படத்தில் நடிக்கப் போகும் ஆர்.ஜே. பாலாஜி!

அப்படியே கனவு போல இருக்கு பாஸ்.. "மணி" படத்தில் நடிக்கப் போகும் ஆர்.ஜே. பாலாஜி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னம் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு ஒரு கனவு போல உள்ளது என நடிகர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

ஆர்ஜேவாக இருந்த பாலாஜி தற்போது காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். தற்போது 'கடவுள் இருக்கான் குமாரு', 'பறந்து செல்ல வா', 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பாலாஜிக்குக் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து அவர் '' மணிரத்னம் படங்கள் பார்த்து வளர்ந்தேன். தற்போது அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

RJ Balaji on Board Maniratnam Movie

ஒரு கனவுபோல இருக்கிறது'' என்று தெரிவித்திருக்கிறார். கார்த்தி-அதிதி ராவ் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஊட்டியில் வருகின்ற 8ம் தேதி பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விமானியாக கார்த்தி நடிக்கும் இப்படத்தின் கதையை காதலை மையப்படுத்தி மணிரத்னம் எடுக்கவிருக்கிறாராம்.

'காற்று வெளியிடை கண்ணம்மா' என்ற பிரபல பாடல் வரிகளை இப்படத்திற்கு தலைப்பாக வைத்திருப்பதாக தகவல் வெளியானாலும், படக்குழு தரப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

English summary
RJ Balaji Play a Key Role in Mani Ratnam's Upcoming Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil