»   »  வெட்கம், மானம், சூடு, சொரணை இருப்பவர்கள் அரசியலுக்கு வரமாட்டாங்க: ஆர்.ஜே. பாலாஜி

வெட்கம், மானம், சூடு, சொரணை இருப்பவர்கள் அரசியலுக்கு வரமாட்டாங்க: ஆர்.ஜே. பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெட்கம், மானம், சூடு, சொரணை, பயம், சாதாரண குடும்ப வாழ்க்கையில் இருக்கும் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விழா ஒன்றில் தமிழக அரசியல் குறித்து அவர் காமெடியாக பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது,

காமெடி

காமெடி

கடைசி இரண்டு, 3 மாசத்துல நிறைய விஷயம் பார்த்துட்டோம். இங்க வந்தால் 15 நிமிடம் காமெடியாக பேசுமாறு கூறினார்கள். இப்ப காமெடி வேண்டுமானால் தந்தி டிவி, புதிய தலைமுறை டிவி தான் பார்க்கணும்.

வளர்மதி

வளர்மதி

ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள் இருந்தார்கள். இன்று அதே எம்.எல்.ஏ.க்கள் இங்கு வந்தால் மரியாதை அளிப்பார்கள். இங்கு வளர்மதி வந்தால், வளர்மதியே வருக, வளமான தமிழகம் தருக என்பார்கள். யாரை நாம் ஆதரிக்கணும்.

அரசியல்

அரசியல்

அரசியல் என்பது ஆசை இல்லை அது அழிவு. நான் இளைஞர்களை அரசியலுக்கு வர தூண்டுவதாக கூறுகிறார்கள். நான் யாரையும் அசிங்கமா பண்ண தூண்டிவிடலை.

வெட்கம்

வெட்கம்

வெட்கம், மானம், சூடு, சொரணை, பயம், சாதாரண குடும்ப வாழ்க்கையில் இருக்கும் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். அய்யய்யோ ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயம். அதனால் அரசியலுக்கு வருவது இல்லை.

எம்.எல்.ஏ.க்கள்

இன்னைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும், ஒவ்வொரு அரசியல்வாதியையும் ஊரே திட்டுது, நாடே திட்டுது அசிங்கப்படுத்தது. ஆனால் இவங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே கிடையாது. இது போன்று 11 நிமிடம் பேசியுள்ளார் பாலாஜி.

English summary
RJ Balaji has posted a video on Twitter in which he criticised the politicians and how ordinary people are scared to come to politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil