»   »  ஐபிஎல்லை மாத்தியாச்சு, இப்ப காவிரி மேலாண்மை வாரியம் வந்துடும்ல?: ஆர்.ஜே. பாலாஜி

ஐபிஎல்லை மாத்தியாச்சு, இப்ப காவிரி மேலாண்மை வாரியம் வந்துடும்ல?: ஆர்.ஜே. பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil
போராட்டத்திற்கு இடையே டிரெண்டாகும் ஆர்.ஜே. பாலாஜி-வீடியோ

சென்னை: ஐபிஎல் போட்டிகள் நடக்கும் இடம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது காவிரி மேலாண்மை வாரியம் வந்துடும்ல என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு இடையே சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

எதிர்ப்பு காரணமாக சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கமெண்டரி

கமெண்டரி

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் எதிர்ப்புகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்றது. தமிழர்களின் உணர்வை மதித்து அந்த போட்டிக்கு கமெண்டரி செய்யும் வேலையை நிராகரித்தார் ஆர்.ஜே. பாலாஜி.

காவிரி

தற்போது ஐபிஎல் போட்டிகள் நடக்கும் இடம் மாற்றப்பட்டது. தேசிய அளவில் கவனத்தை ஈர்க்க விரும்பியவர்களுக்கு அது கிடைத்துவிட்டது தானே? இப்போ காவிரி மேலாண்மை வாரியம் வந்துடும்ல. காவிரியில் இருந்து கிரிக்கெட்டில் இருந்து வன்முறையின் பக்கம் கவனத்தை திசை திருப்பியுள்ளனர். இது போன்ற சுயநல முறைகளை உணர்வுள்ள தமிழன் யாரும் ஆதரிக்க மாட்டான் என்று ட்வீட்டியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

விளையாட்டு

ஒரு விளையாட்டுக்கு எதிராக போராடி, இடத்தை மாற்ற வைத்ததை வெற்றியாக கருதும் அனைவரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி செய்யுங்கள். முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆர். ஜே. பாலாஜி.

எதிர்ப்பு

பாலாஜியின் ட்வீட்டுகளை பார்த்தவர்களில் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஐபிஎல் போட்டி என்றால் மட்டும் தான் பேசுவீர்களா பாலாஜி என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

English summary
RJ Balaji tweeted that, 'Now IPL is shifted,ppl who wanted national attentn,got tat right?Ipo Cauvery Management Board vandhurum la.Only thing thy managed to do is to divert attention frm cauvery to cricket to http://violence.No sensible Tamizhan wil supprt thse unruly manipulative selfish methods.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X