Don't Miss!
- News
என்ன ராமலிங்கம் எப்படி இருக்க? கொரோனா பரோல் முடிந்து சிறை திரும்பாத கைதிகள்! சாட்டையை சுற்றிய போலீஸ்
- Finance
எல் ஐ சி-யின் புதிய ஜீவன் ஆசாத் திட்டம்.. ரூ.5 லட்சம் பெற என்ன செய்யணும்?
- Lifestyle
பெண்களே! உங்க முகத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சினை வருமாம்...!
- Sports
ஐசிசி-ன் உச்சகட்ட விருதுகள்.. 3 இந்திய வீரர்கள் கவுரவிப்பு.. விராட் கோலியின் மாஸ் கம்பேக் - விவரம்!
- Technology
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Automobiles
2கே கிட்டிகளை குறி வைக்கும் யமஹா! ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் களத்தில் இறக்கி பெரிய சம்பவத்தைப் பண்ண போறாங்க
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
அதுக்குதான கொடுக்குறாங்க துட்டு... பாக்ஸ் ஆபிஸ் கவலை ரசிகர்களுக்கு எதுக்கு..?: விளாசிய ஆர்ஜே பாலாஜி
சென்னை: ரேடியோ ஜாக்கியாக இருந்து திரையுலகில் அறிமுகமான ஆர்ஜே பாலாஜி, நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கி வருகிறார்.
முன்னணி ஹீரோக்களுடன் காமெடி கேரக்டரில் நடிப்பதுடன், தனியாகவும் ஹீரோ ரோலில் நடித்து வருகிறார்.
ஆர்ஜே பாலாஜி இணை இயக்குநராகவும் பணியாற்றிய மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்களுக்கு ரசிகரளிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் குறித்து சண்டையிடுவது குறித்து ஆர்ஜே பாலாஜி அறிவுரை வழங்கியுள்ளார்.
கோல்ட் படத்தை விமர்சித்த ரசிகர்... விரக்தியின் உச்சத்தில் வெகுண்டெழுந்த அல்போன்ஸ் புத்திரன்

பிஸியான ஆர்ஜே பாலாஜி
பிரபலமான FM சேனலில் ரேடியோ ஜாக்கியாக ரசிகர்களை கவர்ந்த ஆர்ஜே பாலாஜி, ஸ்போர்ட்ஸ் கமெண்ட்ரிகளிலும் கலக்கி வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கேமியோ ரோலில் சினிமாவில் முகம் காட்டிய அவர், பின்னர் முழுநேர காமெடியானாகவும் கலக்கினார். நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி, நயனுடன் இணைந்து காமெடியில் ரகளை செய்த ஆர்ஜே பாலாஜியின் நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஹீரோ கம் டைரக்டர்
தொடர்ந்து பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி, எல்கேஜி படத்தில் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார். அதேநேரம் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படத்தின் கதை, திரைக்கதை எழுதி அதில் இணை இயக்குநராகவும் மாஸ் காட்டினார். இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து வந்த வீட்ல விசேஷம் திரைப்படமும் ஆர்ஜே பாலாஜிக்கு கை கொடுத்தது. தொடர்ச்சியாக சிங்கப்பூர் சலூன், ரன் பேபி ரன் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆர்ஜேபி, ரசிகர்களுக்கு முக்கியமான அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் சண்டை எதுக்கு
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்த ஆர்ஜே பாலாஜி, ரசிகர்கள் தங்களது ஹீரோக்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூலித்தது என ஏன் ஆர்வம் காட்ட வேண்டும். எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வசூல், எது சாதனை என அவர்களது நேரத்தை வீணாக்கி வருகின்றனர். இங்கே எல்லா நடிகர்களும் கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக வங்கிக் கொண்டுதான் நடிக்கிறார்கள். நியாயமாக அவர்கள் தான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

விஜய், அஜித் ரசிகர்களுக்கு தான் அட்வைஸ்ஸா?
மேலும், சீனாவை விட இந்திய மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வேலையிழப்புகள் நடக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம், நமது எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என சிந்திப்பதை விட்டுவிட்டு பாக்ஸ் ஆபிஸ் பத்தி யோசிப்பதும் அதற்காக நேரத்தை செல்வழிப்பதும் தேவையற்றது என கருத்து தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு பாகஸ் ஆபிஸ் வசூல் குறித்து விஜய் - ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அவர்களை குறிவைத்து தான் ஆர்ஜே பாலாஜி அட்வைஸ் செய்துள்ளாரா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.