»   »  சீயான் விக்ரம் பற்றி ரசிகர்களுக்கு தெரியாத ரகசியத்தை சொன்ன ஆர்.ஜே. பாலாஜி

சீயான் விக்ரம் பற்றி ரசிகர்களுக்கு தெரியாத ரகசியத்தை சொன்ன ஆர்.ஜே. பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீயான் விக்ரம் பற்றிய ரகசியத்தை தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

நடிகரும், ஆர்.ஜே. வுமான பாலாஜி தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார். சினிமா, அரசியல் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதன் விபரம் வருமாறு,

நயன்தாரா

நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் பற்றி என்று கேட்டவரிடம் அவர்களை சும்மா விடுங்களேன் என்று பதில் அளித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி பற்றி சில வார்த்தைகள் சொல்லுமாறு ஒருவர் கேட்டார். அதற்கு பாலாஜி, அவர் அருமையான நடிகர், மனிதர், நண்பர் என பதில் அளித்துள்ளார்.

விக்ரம்

சீயான் விக்ரம் பற்றி ரசிகர்களுக்கு தெரியாத விஷயம் சொல்லுங்களேன் என்று ஒருவர் கேட்க, அவர் போன் செய்தால் நம்பர் தெரியாது பிரைவேட் நம்பர்னு தான் வரும். சீக்ரெட் ஓகேவா என்று கேட்டுள்ளார் பாலாஜி.

சம்பளம்

கமெண்ட்ரி பண்ணுவதற்கு சம்பளம் எவ்வளவு ப்ரோ என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு பாலாஜி, ரிசார்ட்ல தங்குறதுக்கு எவ்ளவோ அதை விட கம்மி தான் ப்ரோ என்றார்.

சதீஷ்

ஆர்.ஜே. பாலாஜிக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் சதீஷாம்.

ஹாலிவுட்

ப்ரோ எப்ப ஹாலிவுட்ல நடிக்க போறீங்க என்று ஒருவர் கேட்டார். மிஷ்கின் தன் படத்தில் நடிக்க அழைக்கும்போது என்று பதில் அளித்துள்ளார் பாலாஜி.

காதல்

சிறு வயதில் காதலித்தது உண்டா என்று கேட்ட ரசிகரிடம் நான் இன்னும் சிறு வயதில் தான் இருக்கிறேன் என்றார் ஆர்.ஜே. பாலாஜி.

English summary
RJ Balaji had a chat session with his fans. At that time, he revealed a secret about actor Vikram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil