»   »  போராட்டத்திற்கு இடையே டிரெண்டாகும் ஆர்.ஜே. பாலாஜி: காரணம் அவரின் 'பலே ஐடியா' வீடியோ #RJBalaji

போராட்டத்திற்கு இடையே டிரெண்டாகும் ஆர்.ஜே. பாலாஜி: காரணம் அவரின் 'பலே ஐடியா' வீடியோ #RJBalaji

Posted By:
Subscribe to Oneindia Tamil
போராட்டத்திற்கு இடையே டிரெண்டாகும் ஆர்.ஜே. பாலாஜி-வீடியோ

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே பதட்டமான சூழல் நிலவும் நிலையில் ஆர்.ஜே. பாலாஜி சூப்பராக ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதற்கிடையே ஆர்.ஜே. பாலாஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,

கமெண்ட்ரி

கமெண்ட்ரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் ஒரு தமிழனாக என்னுடைய பங்களிப்பாக இன்று சென்னையில் நடக்கும் சிஎஸ்கே போட்டியில் என் வேலையான கமெண்டரியை நான் பண்ணவில்லை.

நன்றி

நன்றி

இந்த முடிவை சம்பந்தப்பட்ட சேனலிடம் கூறியபோது அவர்கள் எங்களின் உணர்வுகளை மதித்து ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. மொத்த நாட்டின் கவனத்தை பெற இப்படி போராடுவதாக கூறுகிறார்கள்.

எம்.பி.க்கள்

எம்.பி.க்கள்

நாம் ஓட்டு போட்டுள்ள 234 எம்.எல்.ஏ.க்களும், 40 எம்.பி.க்களும் மொத்தமாக ராஜினாமா செய்தால் நாட்டின் மொத்த கவனத்தையும் பெறலாம். ஒரு மாநிலத்தில் நிர்வாகமே இல்லையா என்று அனைவரும் திரும்பிப் பார்ப்பார்கள் என்கிறார் பாலாஜி.

டிரெண்ட்

சிஎஸ்கே, கொல்கத்தா இடையேயான போட்டி துவங்க உள்ள நிலையில் ஆர்.ஜே. பாலாஜி வீடியோ வெளியிட்டதால் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளார். இது தான் அந்த வீடியோ.

English summary
RJ Balaji is trending on social media at a time people are protesting against the IPL match between CSK and KKR in Chennai Chepauk stadium.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X