»   »  தல, தளபதி ரசிகாஸ்களே, ஆர்.ஜே. பாலாஜி உங்களிடம் ஒன்னு சொல்லணுமாம்

தல, தளபதி ரசிகாஸ்களே, ஆர்.ஜே. பாலாஜி உங்களிடம் ஒன்னு சொல்லணுமாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் மோதிக் கொள்ள வேண்டாம் என ஆர்ஜே பாலாஜி தல, தளபதி ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அஜீத்தும், விஜய்யும் அண்ணன் தம்பியாக பழகுகிறார்கள். ஆனால் அவர்களின் ரசிகர்களோ எலியும், பூனையுமாக உள்ளனர். நேரம் கிடைக்கும் போது எல்லாம் சமூக வலைதளங்களில் மோதுவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.

RJ Balaji's request to Thala, Thalapathi fans

அஜீத்தை கிண்டல் செய்து விஜய் ரசிகர்களும், விஜய்யை கிண்டல் செய்து அஜீத் ரசிகர்களும் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போடுகிறார்கள், ட்வீட்டுகிறார்கள். மோதிக்காதீங்கப்பா என்று அஜீத்தும், விஜய்யும் கூறியும் அவர்கள் கேட்கவில்லை.

இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தல, தளபதிக்கு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, தயவு செய்து சமூக வலைதளங்களில் மோதிக் கொள்ளாதீர்கள் என்பது தான் அந்த வேண்டுகோள்.

அவரது வேண்டுகோளை கேட்டு என்ன சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை.

English summary
RJ Balaji has requested Thala, thalapathi fans to avoid clash on social media platforms.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil