twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜாதியை ஒழிக்க நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அவசியம்… ஆர்.ஜே.பாலாஜி பேச்சு !

    |

    சென்னை : நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆர்.ஜே. பாலாஜி கலந்து கொண்டு கலகலப்பாக பேசினார்.

    Recommended Video

    ரெண்டு வருஷம் பாட்ஷா மாதிரி வெளியே வராம இருந்தேன் | Rj Balaji| Nenjukkuu Needhi | Udhayanidhi

    ஆயுஷ்மான் குரானா நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஆர்டிக்கிள் 15' திரைப்படம், தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    தமிழில் இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இதயம் மட்டும் பெரிதாக இருந்துவிட்டால்... விக்னேஷ் சிவன் சொன்ன பாயிண்ட் நல்லாத்தான் இருக்கு! இதயம் மட்டும் பெரிதாக இருந்துவிட்டால்... விக்னேஷ் சிவன் சொன்ன பாயிண்ட் நல்லாத்தான் இருக்கு!

    நெஞ்சுக்கு நீதி

    நெஞ்சுக்கு நீதி

    நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

    டிரைலர் மற்றும் இசை வெளியீடு

    டிரைலர் மற்றும் இசை வெளியீடு

    இந்த நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது .இதில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின், இயக்குர் அருண்ராஜா காமராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, சில ஆண்டுகளாக பாஷா பாய் மாதிரி மறைந்து இருந்தேன். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு கட்டாயம் வரவேண்டும் என்பதால் வந்திருக்கிறேன். ஏன் என்றால், நெஞ்சுக்கு நீதி படத்தையும், நான் அடுத்து நடிக்கும் படத்தையும் போனிகபூர் தான் தயாரித்து வருகிறார் என்றார்.

    இதுபோன்ற படங்கள் வரவேண்டும்

    இதுபோன்ற படங்கள் வரவேண்டும்

    இன்றைய காலகட்டத்தில் நெஞ்சுக்கு நீதிமன்ற போன்ற திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை இயக்கிய, அருண்ராஜா காமராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜெய்பீம், பரியேரும் பெருமாள், அசுரன் போன்ற திரைப்படங்கள் எல்லாம் வரும் போது, இல்லாத ஜாதியை பற்றி பேசுறாங்க, படம் எடுக்குறாங்க என்று பலர் பேசுவதை கேட்க முடிந்தது.

    கல்லூரி மாணவர்கள் மனதில்

    கல்லூரி மாணவர்கள் மனதில்

    தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 445 கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஜாதி கொடுமைகளுக்கு எதிராக படம் வரவேண்டும். பா.ரஞ்சித்தின் படத்தை பார்க்கமாட்டோம் என்று கல்லூரி மாணவர்கள் சிலர் சொன்னார்கள் என்று குறிப்பிட்ட ஆர்.ஜே.பாலஜி, அந்த அளவுக்கு கல்லூரி மாணவர்கள் மனதில் ஜாதி எண்ணம் புரையோடி உள்ளது என்றார்.

    நெளிந்த சிவகார்த்திகேயன்

    நெளிந்த சிவகார்த்திகேயன்

    வளரும் இளைய தலைமுறையினர் மனதில் இது போன்ற தீண்டாமை எண்ணம் வளராது என்றார். அதற்காக இதுபோன்ற படங்கள் வெளிவர வேண்டும். இப்போது வரும் படங்களில் கொலைகாரன், டான், ரௌடி என கதாநாயகனை நாம மாஸாக காட்டும் படங்களைத்தான் பார்க்கிறோம். என்றார். ஆர்.ஜே.பாலாஜி டான் என்றவுடன் சிவகார்த்திகேயன் அப்படியே நெளிந்தார், உடனே ஆர்.ஜே.பாலாஜி நான் இந்த டானை சொல்லவில்லை என்று கூறி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    English summary
    RJ Balaji Speech at Nenjukku Neethi Trailer and audio Launch!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X