»   »  இயக்குனர் என்னை செமயா திட்டினார், பொளேர்னு அடிச்சிருவாரோன்னு பயந்தேன்: ஆர்.ஜே. பாலாஜி

இயக்குனர் என்னை செமயா திட்டினார், பொளேர்னு அடிச்சிருவாரோன்னு பயந்தேன்: ஆர்.ஜே. பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் கண்ணன் தன்னை அடித்துவிடுவாரோ என்று பயந்ததாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள இவன் தந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட ஆர்.ஜே. பாலாஜி பேசியதாவது,

இவன் தந்திரன்

இவன் தந்திரன்

இவன் தந்திரன் என்பது வந்து ஒரு மனுஷன் 28, 30 நாட்கள் அவரை வருத்தி, டீமை வருத்தி, இருப்பதை வைத்து சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள படம். இயக்குனர் கண்ணன் சார் முதல் முறை என்னிடம் போனில் பேசியபோது அவருக்கு என் மீது பயங்கரமாக கோபம் வந்தது.

சேட்டை

சேட்டை

சேட்டை படம் பார்த்துவிட்டு நான் ஒரு விமர்சனம் சொல்லியிருந்தேன். உடனே அவர் எனக்கு போன் செய்து செமயா பேசினார். செந்தமிழ் நாடெனும் போதினிலே என்பது போல் காது கொய்ங் என்றது. அவர் பாட்டுக்கு திட்டிக்கிட்டே இருந்தார்.

கதை

கதை

திட்டிய சம்பவம் நடந்து 2, 3 ஆண்டுகள் கழித்து இவன் தந்திரன் கதையை என்னிடம் சொல்ல வந்தபோது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. அய்யோ இவர் நம்மை திட்டியிருக்காரே, கதை சொல்கிறேன் என்று பல நாள் கோபத்தில் பொளேர்னு அடித்துவிடுவாரோ என்று பயந்தேன்.

படம்

படம்

இந்த படத்தில் நான் 12 நாட்கள் தான் பணியாற்றினேன். ஆனால் 30, 35 நாட்கள் நடித்தவர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை எனக்கு கொடுத்திருந்தார்கள். முதல் சந்திப்பில் இருந்த தயக்கம் தற்போது இல்லை. கண்ணன் சாருடன் நான் மீண்டும் படம் பண்ணுவேனா என தெரியவில்லை. ஆனால் அவர் என் நண்பராகிவிட்டார் என்றார் பாலாஜி.

English summary
RJ Balaji said that he was scared when director Kannan came to see him to narrate the story of Ivan Thanthiran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil