Don't Miss!
- Automobiles
புதிய டொயோட்டா இன்னோவா காரின் டெலிவரி தொடங்கியது! இவ்ளோ மைலேஜ் தருமா! அதான் எல்லாரும் வரிசைல நிக்கறாங்க!
- News
+2,+11,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. தமிழக பள்ளி மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் குட் நியூஸ்
- Lifestyle
தினமும் காலையில் இந்த 5 பானங்களை குடிச்சீங்கனா... உங்க எடை 'சர்ருனு' குறைஞ்சிடுமாம் தெரியுமா?
- Finance
தங்கம் விலை இன்று எப்படியிருக்கு தெரியுமா.. கூடியிருக்கா குறைஞ்சிருக்கா.. இனி எப்படியிருக்கும்?
- Technology
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
ஏய் எப்புர்ரா.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஆர்ஜே பாலாஜி.. என்ன மேட்டர் தெரியுமா?
சென்னை: ஆர்ஜேவாக இருந்த பாலாஜி காமெடி நடிகராக சினிமாவில் என்ட்ரி கொடுத்து சில படங்களிலேயே ஹீரோவாக உயர்ந்து விட்டார்.
இயக்குநராகவும் ஹீரோவாகவும் அசத்தி வரும் ஆர்ஜே பாலாஜியா இல்லை அவர் தம்பியா? என கேட்கும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி உள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
என்ன திடீரென நடிகர்கள் எல்லாம் செம சேஞ்ச் ஓவர் கொடுக்கிறாங்களே என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மெய் மறந்து போயுள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி எடுத்த அதிரடி முடிவு… பிரம்மாண்டமாக உருவாகும் அடுத்த மல்டி ஸ்டார்ஸ் மூவி

அசத்தும் ஆர்ஜே பாலாஜி
பிக் எஃப்எம்மில் ஆர்ஜேவாக தனது பணியை ஆரம்பித்த ஆர்ஜே பாலாஜி 2013ம் ஆண்டு வெளியான புத்தகம் படத்தில் வெறும் வாய்ஸ் ஓவர் மட்டும் கொடுத்திருப்பார். அடுத்த ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் காமெடியனாக நடித்த ஆர்ஜே பாலாஜி, நானும் ரவுடி தான் படத்தின் மூலம் காமெடி நடிகராக கலக்கினார்.

நயன்தாராவுடன் இணைந்து
கடந்த 2019ல் அரசியல் நய்யாண்டி படமாக வெளியான எல்கேஜி திரைப்படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்த ஆர்ஜே பாலாஜி தொடர்ந்து ஹீரோவாகவும் இயக்குநராகவும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தில் தனது ஒட்டுமொத்த திறமையும் வெளிப்படுத்தினார். இந்த ஆண்டு வெளியான ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சிங்கப்பூர் சலூன்
இந்த ஆண்டு போனி கபூர் தயாரிப்பில் வெளியான வீட்ல விசேஷம் படத்தைக் கொடுத்த ஆர்ஜே பாலாஜி அடுத்த ஆண்டு சம்மருக்கும் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்த சிங்கப்பூர் சலூன் படத்தை உருவாக்கி வருகிறார். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது என்கிற அறிவிப்பை சூப்பராக வெளியிட்டுள்ளார்.

ஆர்ஜே பாலாஜி தம்பியா
ஏய் எப்புர்ரா.. எனக் கேட்கும் அளவுக்கு ஆர்ஜே பாலாஜி தாடி மீசை எல்லாம் வைத்திருந்த லுக்கில் இருந்து க்ளீன் ஷேவ் செய்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி உள்ள லேட்டஸ்ட் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இது ஆர்ஜே பாலாஜியா? இல்லை அவருடைய ஒன்னு விட்ட சித்தப்பா பையனா எனக் கேட்கும் அளவுக்கு இருக்கும் நியூ லுக்கை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

காட்சியும் லீக்
சிங்கப்பூர் சலூன் படத்தில் தாடி, மீசை இல்லாமல் புது வித லுக்கில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள ஒரு காட்சியும் இணையத்தில் லீக் ஆகி டிரெண்டாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் நீங்கள் ஒரு வில்லன் மெட்டீரியல், வில்லனாக ஏதாவது படத்தில் ட்ரை பண்ணுங்க செமையா இருக்கும் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கையில் என்ன காயம்
ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ள புகைப்படத்தை எக்ஸ்ட்ரா ஜூம் அடித்து பார்த்த அவரது ரசிகர்கள், இடது கையில் என்ன அண்ணா காயம் என அன்புடன் விசாரித்தும் வருகின்றனர். சிங்கப்பூர் சலூன் படம் நிச்சயம் உங்களுக்கு பெரிய வெற்றியாக அமையும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

தளபதி படம்
வீட்ல விசேஷம் படம் வெளியான சமயத்தில் நடிகர் விஜய் கதை கேட்டார்.. நான் சொன்ன கதை இப்போதைக்கு பண்ண முடியாதுன்னு சொல்லிட்டார்.. இப்போ இல்லைன்னாலும், இன்னும் சில வருடங்கள் கழித்தாவது அவருக்கு ஒரு பான் இந்தியா படம் பண்ணுவேன் என ஆர்ஜே பாலாஜி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.