»   »  சந்தானம் இடத்தை நோக்கி பயணிக்கும் ஆர்ஜே. பாலாஜி #RJ_Balaji

சந்தானம் இடத்தை நோக்கி பயணிக்கும் ஆர்ஜே. பாலாஜி #RJ_Balaji

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் நானும் ரவுடிதான் படம்தான் ஆர்ஜே பாலாஜியை தனி காமெடியனாக அடையாளம் காட்டியது. அந்த படம் ஆரம்பித்து வைத்த கேரியர் அமோகமாக சென்றுகொண்டிருக்கிறது.

மணிரத்னம் இயக்க கார்த்தி நடிக்கும் பட்த்தில் காமெடியன் ஆர்ஜே பாலாஜி தான். இதுதவிர, தேவி, கடவுள் இருக்கான் கொமாரு, கவலை வேண்டாம், கீ என வரிசையாக படங்களை கையில் வைத்திருக்கிறார்.

RJ Balaji towards Santhanam's place

இன்னும் சில படங்கள் பாலாஜியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றன. இத்தனை படங்கள் கமிட் ஆகியும் கூட இன்னும் விஜய், அஜித், சூர்யா ஆகிய மூவர் படங்களில் மட்டும் இன்னும் பாலாஜி நடிக்கவில்லை.

ஆர்ஜே.பாலாஜியின் அசுர வேக வளர்ச்சி மெதுவாக வளர்ந்துகொண்டிருந்த சதீஷுக்கு தான் பின்னடைவு. ஆர்ஜே.பாலாஜி சொந்தமாக யோசித்து கொஞ்சம் டெவலப் செய்து ஸீன்களை சுவாராஸ்யமாக்கி விடுவதால் முன்னணி இயக்குனர்களே பாலாஜியை நோக்கி செல்கின்றனர்.

சதீஷும், சூரியும் இப்போதைக்கு தங்களுக்கு நெருக்கமான சில ஹீரோக்களுடன் மட்டும்தான் நடித்துவருகிறார்கள்.

English summary
In Kollywood, actor RJ Balaji is nearing Santhanam's place in performing comedy role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil