»   »  வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட ஆர்.ஜே.பாலாஜி! -ட்விட்டரில் பங்கம்!

வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட ஆர்.ஜே.பாலாஜி! -ட்விட்டரில் பங்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அவரிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட ஆர்.ஜே.பாலாஜி-வீடியோ

சென்னை : காமெடி நடிகரும், ஆர்.ஜே-வுமான பாலாஜி தனது ரசிகர்களுடன் நேற்று ட்விட்டரில் கலந்துரையாடினார்.

அவர் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார். ரசிகர்கள் கேட்ட சினிமா, அரசியல் மற்றும் பொதுவான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில், காமெடியன் சதீஷ் பற்றி கலாய்க்கும் விதமாக ஒரு பதில் சொல்லியிருந்தார். அதற்கு சதீஷ் இப்போது நெத்தியடி பதிலடி ஒன்றைக் கொடுத்துள்ளார்.

காமெடியன் சதீஷ் :

உங்களுக்குப் பிடித்த காமெடியன் யார் எனும் கேள்விக்கு, 'சதீஷ்தான் பிடித்த காமெடியன்... நம்புங்க' என கலாய்க்கும் விதமாக ரிப்ளை செய்திருந்தார்.

பதிலடி கொடுத்த சதீஷ் :

இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி தன்னைக் கலாய்த்ததற்கு அவரைச் சீண்டும் விதமாக ஒரு ரிப்ளை போட்டிருக்கிறார் காமெடியன் சதீஷ்.

ஹாஹா... ப்ரோ எது காமெடி.... ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கடைசி நாள்ல நீங்க ஒரு வீடியோ போட்டீங்களே அந்த காமெடியை விடவா? எனக் கேட்டு பங்கமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி :

இதுதான் ஆர்.ஜே.பாலாஜியோட நிலைமை என ஒருவர் Gif வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.

குருநாதா :

ஜல்லிக்கட்டு வீடியோ பாலாஜியை, நடிகர் சதிஷ் அழைத்து வந்த போது... தட் குருநாதா மொமென்ட்!

அப்போ இப்போ :

இனிமே கார்ல யாராவது கட்சிக் கொடி கட்டிக்கிட்டு ரூல்ஸை மதிக்காம போனா நாங்க தட்டிக்கேட்போம். இனிமே நாங்கதான்.

கடைசி நாளில் : எல்லாம் முடிஞ்சுபோச்சு கெளம்புங்க!

தொப்பி தொப்பி :

'எந்திரன்' படத்துல வரும் 'தொப்பி தொப்பி' மொமென்ட் போல என ஒருவர் சொல்லியிருக்கிறார்.

நெத்தியடி ரிப்ளை :

பாவம், இப்படி ஓப்பனாவா செய்வீங்க இப்படி எனக் கேட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

Read more about: sathish சதீஷ்
English summary
Actor RJ Balaji discussed with his fans on Twitter. When answered the question, he trolled actor Sathish. Actor Sathish has trolled to RJ Balaji's reply.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil