»   »  "அம்மிணி" போய்ட்டாங்க.. மீண்டும் டிவிட்டருக்கு திரும்பிய ஆர்.ஜே. பாலாஜி!

"அம்மிணி" போய்ட்டாங்க.. மீண்டும் டிவிட்டருக்கு திரும்பிய ஆர்.ஜே. பாலாஜி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் இருந்து வெளியேறிய பிறகு ஆர்.ஜே. பாலாஜி முழு வீச்சில் ட்வீட் செய்யத் துவங்கியுள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் கடவுள் இருக்கான் குமாரு. இந்த படத்தில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பாலாஜி செமயாக கலாய்த்திருப்பார்.

RJ Balaji tweets while Lakshmi quits Twitter

இதை பார்த்த லட்சுமி பாலாஜியை ட்விட்டரில் திட்டித் தீர்த்துவிட்டார். மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த ரசிகர்களையும் அவர் விளாசினார். இரண்டு மூன்று நாட்களாக ட்விட்டரில் கோபமாக ட்வீட் போட்டு வந்தார்.

பாலாஜியோ லட்சுமி கோபத்தில் இருப்பதை பார்த்து ட்விட்டரில் பதிலும் சொல்லவில்லை, வேறு எந்த ட்வீட்டும் போடவும் இல்லை. இந்நிலையில் கோபத்தின் உச்சத்திற்கு போன லட்சுமி ட்விட்டரில் இருந்து நேற்று வெளியேறினார்.

அதன் பிறகு பாலாஜி முழுவீச்சில் ட்வீட்கள் போட்டு வருகிறார்.

English summary
RJ Balaji who was quiet sometime over Lakshmi Ramakrishnan issue is tweeting again in full swing after she left social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil