»   »  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்த்து ஆர்.ஜே. பாலாஜி இப்படி சொல்லிட்டாரே!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்த்து ஆர்.ஜே. பாலாஜி இப்படி சொல்லிட்டாரே!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி

சென்னை: இது என்ன முதியோர் கிரிக்கெட்டா என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து கலாய்த்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நேற்று துவங்கியது. இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் விளையாட உள்ளது.

வழக்கம் போல சென்னை அணியில் தல டோணி உள்ளார்.

வீரர்கள்

வீரர்கள்

நேற்றைய ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்ட வீரர்களில் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்நிலையில் இது குறித்து ஆர்.ஜே. பாலாஜி விமர்சித்துள்ளார்.

ராயுடு

ராயுடு

ஹர்பஜன் சிங், கரண் சர்மா, ராயுடு ஆகியோர் எதிரணியில் விளையாடினாலே செம்ம கலாய் கலாய்ப்பேன். இதில் நம்ம அணியில் எடுத்து வச்சிருக்காங்க என்று ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

பொங்கல்

பொங்கல்

ஹர்பஜன் சிங் பொங்கலுக்கு தை திருநாள் வாழ்த்துக்கள் என்று தமிழில் ட்வீட்டிபோதே ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு நினைத்தேன். அதே மாதிரி நம்ம அணிக்கு வந்துட்டாங்க என்கிறார் பாலாஜி.

முதியோர் கிரிக்கெட்

ஏன் 30 வயதுக்கு மேற்பட்டவர்களா எடுத்து வச்சிருக்காங்க?. நம்ம என்ன முதியோர் கிரிக்கெட், மாஸ்டர்ஸ் கிரிக்கெட் மாதிரி ஒரு ஃபீலிங் வருது. இன்றாவது இளைஞர்களை ஏலத்தில் எடுப்பார்கள் என்று நம்புவோம் என்று வீடியோவில் தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

English summary
RJ Balaji has posted a video on twitter about the players taken for Chennai Super Kings. He is not happy as the players are above 30. He even talked about Harbhajan Singh's tweet in tamil for Pongal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil