twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆர்.கே செல்வமணி கோரிக்கை … விஜய் ஏற்றுக்கொண்டார்… அஜித் ஏற்றுக்கொள்வாரா?

    |

    சென்னை : ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதை அஜித் நிறுத்த வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.

    Rk selvamani request to actor ajith

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய், அஜித், தனுஷ், விஷால் போன்ற முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் தங்களது படத்தின் ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் உள்ள ராமேஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடத்தி வருகின்றனர்.

    Recommended Video

    FEFSI ஊழியர்களுக்கு எதிராக நடிகர் அஜித் இருப்பதாக RK செல்வமணி புகார்

    தமிழ் நாட்டில் படப்பிடிப்பு நடக்காததால் பெப்சி தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக கூறினார். இதனால், தமிழகத்தில் படப்பிடிப்பை நடத்துமாறு நடிகர் விஜய்யிடம் கோரிக்கை வைத்தோம். இதை ஏற்றுக்கொண்ட விஜய், பெப்சி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தயாரிப்பாளருடன் பேசி, சென்னையில் படப்பிடிப்பை நடத்த அறிவுறுத்தினார். இதற்கு தயாரிப்பாளரும் சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறினார்.

    மோடி-அம்பேத்கர் ஒப்பீடு விவகாரம்.. ஏய் வாய மூடு.. நிருபரை ஒருமையில் திட்டிய கங்கை அமரன் !மோடி-அம்பேத்கர் ஒப்பீடு விவகாரம்.. ஏய் வாய மூடு.. நிருபரை ஒருமையில் திட்டிய கங்கை அமரன் !

    நடிகர் அஜித் குமார் தனது படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர்க்கும் எங்கள் கோரிக்கை இதுதான். சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது என்றார்.

    நாளை காலை 10.30 மணி அளவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன், பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும், பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையும் என நம்புகிறேன் என்றார். மேலும், நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் மே 8-ம் தேதி நடைபெற இருப்பதால், அன்று ஒரு நாள் மட்டும் சென்னையில் எந்தவொரு திரைப்பட படப்பிடிப்பும் நடைபெறாது என்றார்.

    English summary
    Rk selvamani request to actor ajith
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X