»   »  எம்ஜிஆரின் ஆஸ்தான கதை வசனகர்த்தா ஆர்கே சண்முகம் மரணம்!

எம்ஜிஆரின் ஆஸ்தான கதை வசனகர்த்தா ஆர்கே சண்முகம் மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமரர் எம்ஜிஆர் படங்களுக்கு கதை வசனம் எழுதிய ஆர்கே சண்முகம் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆர்கே சண்முகம். 10 வயதில் சென்னைக்கு வந்த அவர், திரைப்படங்களில் அடிமட்ட தொழிலாளியாக இருந்து படிப்படியாக இயக்குநர் பிஆர் பந்துலுவின் உதவி இயக்குநராக மாறினார். கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட பல சிவாஜி கணேசன் படங்களில் பணியாற்றினார்.

RK Shanmugam passes away

பின்னர் எம்ஜிஆர் படங்களுக்கு ஆஸ்தான வசனகர்த்தாவாகா மாறினார். ஆயிரத்தில் ஒருவன், முகராசி, நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும், ரகசிய போலீஸ் 115, பல்லாண்டு வாழ்க, ஊருக்கு உழைப்பவன், தலைவன், தேடி வந்த மாப்பிள்ளை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

1980-ல் கலைமாமணி விருது பெற்ற ஆர்கே சண்முகத்துக்கு, எம்ஜிஆர்தான் ஒரு வீட்டை பரிசாக வழங்கினார். லாயிட்ஸ் சாலையில் உள்ள அந்த வீட்டில்தான் ஆர்கே சண்முகம் உயிர் நேற்று பிரிந்தது.

ஆர் கே சண்முகத்துக்கு மனைவி தேவி (75), நான்கு மகள்கள் உள்ளனர்.

English summary
MGR's dialogue writer RK Shanmugam passed away on Tuesday
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil