»   »  நடிகர், டிவி சீரியல் நடிகையின் திருமணம் தள்ளிப் போகலையாம், நின்னுடுச்சாமே

நடிகர், டிவி சீரியல் நடிகையின் திருமணம் தள்ளிப் போகலையாம், நின்னுடுச்சாமே

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகர், டிவி சீரியல் நடிகையின் திருமணம் நின்றுவிட்டது .

சென்னை: நடிகர் ஆர்.கே. சுரேஷ், டிவி சீரியல் நடிகை திவ்யாவின் திருமணம் நின்றுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகரும், தயாரிப்பாளுமான ஆர்.கே. சுரேஷுக்கும், டிவி சீரியல்களில் நடித்து வரும் திவ்யாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது பெரியவர்களாக பார்த்து நிச்சயம் செய்தது என்று இருவரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் திருமணம் தள்ளிப் போனது என்று செய்திகள் வெளியாகின.

பிரச்சனை

பிரச்சனை

ஜாதகத்தில் பிரச்சனை இருப்பதால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டதாக கடந்த டிசம்பர் மாதம் ஆர்.கே. சுரேஷ் தெரிவித்தார். ஆனால் சுரேஷும், திவ்யாவும் பிரிந்துவிட்டதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது.

திருமணம்

திருமணம்

தனக்கும், ஆர்.கே. சுரேஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுவதை விட இப்போதே பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்ததாகவும் திவ்யா தற்போது தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சம்மதம்

சம்மதம்

பெரியோர்களாக பார்த்து நிச்சயம் செய்த திருமணம் என்பதால் அவர்களிடம் முறையே தெரிவித்து சம்மதம் பெற்று பிரிந்துவிட்டார்களாம் ஆர்.கே. சுரேஷ் மற்றும் திவ்யா.

முழுக்கு

முழுக்கு

நான் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று கூட திவ்யா முன்பு தெரிவித்திருந்தார். திவ்யா சுமங்கலி சீரியல் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, actor cum producer RK Suresh and Television serial actress Divya have parted their ways due to difference in opinion. Suresh and Divya got engaged last year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil