»   »  கடவுள் சொல்லாமலே நாம் கோவில் கட்டி கும்பிடுவது போல் தான் 'தல' ரசிகர்களும்!

கடவுள் சொல்லாமலே நாம் கோவில் கட்டி கும்பிடுவது போல் தான் 'தல' ரசிகர்களும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு கோவில் கட்டி கும்பிடுங்க என்று கடவுள் சொல்லாமலே நாம் செய்வது போன்று தான் அஜீத் ரசிகர்களும் என்று ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.

திரைப்பட வினியோகஸ்தர், தயாரிப்பாளராக இருந்த ஆர்.கே. சுரேஷ் இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படம் மூலம் வில்லனாக திரையுலகில் அறிமுகமானார்.

வில்லனாக அறிமுகமான அவர் தற்போது ஹீரோவாகிவிட்டார்.

பில்லா பாண்டி

பில்லா பாண்டி

சுரேஷ் தற்போது கோலிவுட்டின் மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவர். காரணம் அவர் 7 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று பில்லா பாண்டி.

தல ரசிகன்

தல ரசிகன்

பில்லா பாண்டி படத்தில் ஆர்.கே. சுரேஷ் அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகியாக நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. தல ரசிகர்கள் அதை கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.

அஜீத்

அஜீத்

எனக்கு கோவில் கட்டி கும்பிடுங்க என்று கடவுள் என்றுமே கூறியது இல்லை. ஆனால் நாம் கோவில் கட்டி கும்பிடுகிறோம். அதே போன்று அஜீத் ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்துவிட்டாலும் அவரை அவரின் ரசிகர்கள் மன்றம் வைத்து கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள் என்று சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ரிச்சர்ட்

ரிச்சர்ட்

நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு அஜீத் குடும்பத்தாரை நன்கு தெரியும். ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் என் நெருங்கிய நண்பர் என ஆர். கே. சுரேஷ் கூறியுள்ளார்.

ஐஸ்

ஐஸ்

பில்லா பாண்டி படத்திற்கு விளம்பரம் தேடவே சுரேஷ் அஜீத் ரசிகர்களுக்கு ஐஸ் வைக்கிறார். நல்லா வருவார் என்று நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
Producer turned actor RK Suresh said that Thala fans are celebrating their favourite actor Ajith just like people construct temple and pray without God even asking for it.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil