»   »  யார்யா இந்த புது வில்லன்... இப்படி மிரட்டராரு!

யார்யா இந்த புது வில்லன்... இப்படி மிரட்டராரு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலாவால் தாரை தப்பட்டையில் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்ட ஆர் கே சுரேஷ், இப்போது மருது படத்தின் மூலம் கோலிவுட்டில் பேசப்படும் நட்சத்திரமாகியிருக்கிறார்.

இவர் இதற்கு முன் ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர் (ஸ்டுடியோ 9).

ஆனால் இவரது நோக்கமெல்லாம் நல்ல நடிகனாக வேண்டும் என்பதுதானாம். அதனால் வாய்ப்புக்காகக் காத்திருந்தார். இப்போது தமிழ் சினிமாவுக்கு ஏற்ற வில்லன் இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு மிரட்டலான நடிப்பைத் தந்துள்ளார்.

RK Suresh, the new terrific villain

மருது படத்தில் தனது கேரக்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்து போன சுரேஷ், "எனக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு நெகிழ வைக்கிறது. இந்த அந்தஸ்து எனக்கு ஒரு நாளில் வந்ததில்லை. கடினமான உழைப்பும், தீராத நடிப்பு பசியும்தான் காரணம் என்பேன்.

நான் ஒரு இயக்குநரின் நடிகனாகத்தான் இருக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு நடிகனாக முகவரி தந்த பாலா சாருக்கு வாழ் நாள் முழுக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்,' என்கிறார் தன முறுக்கு மீசையை தடவியபடி!

English summary
RK Suresh, the new terrific villain in Tamil Cinema has thanked his mentor Bala for introducing him as villain.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil