இந்துஜா பேட்டியால் கடுப்பான ஆர்.கே.சுரேஷ்... தல பெயருள்ள படத்தில் நடித்ததற்கு கொடுத்து வைத்துள்ளேன்

சென்னை: தயாரிப்பாளரும், நடிகரும், விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் அவர்கள் சமீபத்தில் விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதேபோல விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தையும் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படத்தையும் விநியோகம் செய்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த- "காலங்களில் அவள் வசந்தம்" என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே.சுரேஷ் நடிகை இந்துஜாவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.

காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம்

எர்ணாவூர் நாராயணன் தயாரிப்பில், விஸ்வநாத் நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ள திரைப்படம்தான் "காலங்களில் அவள் வசந்தம்". முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களும் தொழில் நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்கள். ஆண்டுக்கு 18 முதல் 20 படங்கள் பெரிய கதாநாயகர்கள் நடிப்பில் வெளிவருகிறது. மொத்தம் 52 வாரங்களில் மீதமுள்ள வாரங்களில் சிறிய படங்கள்தான் வருகிறது. அப்படிப்பட்ட படங்களை தயாரிப்பதுதான் எங்களுடைய நோக்கம். விரைவில் பெரிய திரைப்படத்தையும் தயாரிப்போம் என்று விஸ்வநாத் கூறியிருக்கிறார்.

பில்லா பாண்டி

பில்லா பாண்டி

ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்த திரைப்படம் "பில்லா பாண்டி". ராஜ் சேதுபதி இயக்கிய இந்தப் படம் கடந்த 2018 ஆண்டு வெளியானது. படத்தில் நடிகர் அஜித்தின் ரசிகராக நடித்திருப்பார் ஆர்.கே சுரேஷ். அதில் சாந்தினி மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள். தான் இந்துஜாவை அறிமுகம் செய்தபோதே தன்னுடைய நிறுவனத்தில் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தாராம் சுரேஷ். தல பெயரில் உள்ள படத்தில் நடிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

இந்துஜா பேச்சு

இந்துஜா பேச்சு

சமீபத்தில் இந்துஜா கொடுத்திருந்த ஒரு பேட்டியில், நீங்கள் நடித்த படங்களில் எது மோசமான படம் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பில்லா பாண்டி என்று கூறியிருக்கிறார். அந்த நேர்காணலை அஜித் ரசிகரான ஒருவர் எனக்கு அனுப்பி,"அண்ணே நாம மோசம் போயிட்டோம்ணே..." என்று வருத்தப்பட்டதாக மேடையில் கூறியிருக்கிறார். மேலும் சீனியர் நடிகர்களை குறிப்பிட்டு இந்துஜாவிற்கு அறிவுரையும் கூறியிருக்கிறார். நடிகர் நடிகைகள் எவ்வளவு வளர்ச்சி வேண்டுமானாலும் அடையாளம். உதாரணத்திற்கு நடிகை சமந்தா இன்று பெரிய அளவில் வளர்ந்திருக்கிறார்.

அறிவுரை

அறிவுரை

சினிமா என்பது ஒரு வட்டம். திடீரென்று பிரபலமானவர்கள் திடீரென்று நிலைமை மாறிவிடும். ஆனால் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அனைவரிடமும் அனைத்து தருணங்களிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதுதான். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய முதல் பட தயாரிப்பாளர் முதல் இன்று தன்னுடைய படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் வரை அனைவரையும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தியிருக்கிறார். அவரைப் போன்ற மூத்த நடிகர்களிடமிருந்து இப்போதுள்ள நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்.கே.சுரேஷ் அறிவுரை கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X