»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

இயக்குனர் மணிரத்னம், படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மணிரத்னம் தற்போது பெயரிடப்படாத இந்திப் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.சிம்ரன், அஜய் தேவ்கன்,அபிஷேக் பச்சன், கரீனா, விவேக் ஓபராய், ராணி முகர்ஜி ஆகியோர் நடித்து வருகின்றனர். சென்னையில் இந்தப்படத்தின் பெரும்பாலான பகுதிகள் எடுக்கப்பட்டன.

கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வந்தது. நேற்று கொல்கத்தாவின் பிரசித்தி பெற்றஹூக்ளி நதி மேம்பாலத்தில் சூட்டிங் நடந்தது. மாலை 5.30 மணியவில் பாலத்திலிருந்து ஹீரோ விவேக் ஓபராய்மோட்டார் சைக்கிளுடன் விழுவது போன்ற காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார் மணிரத்னம்.

அப்போது எதிர்பாராதவிதமாக விவேக் ஓபராய் பைக்கிலிருந்து பாலத்தில் மோதி, விழுந்தார். இதில் அவரது கால்முறிந்து விட்டது.

இந்தக் காட்சியை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மணிரத்னம், விவேக் ஓபராய் பாலத்திலிருந்துஆற்றுக்குள் விழுந்து விடப் போகிறார் என்று பயந்து, மிரட்சியில் அய்யோ என்று கத்தியுள்ளார். இதையடுத்துமணிரத்னம் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து விவேக் ஓபராய் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரும் உடனடியாக பிர்லா மருத்துவமனைக்குஎடுத்துச் செல்லப்பட்டனர்.

மணிரத்னத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இப்போது அவரது நிலைமை தேறி வருவதாகவும் டாக்டர்கள்தெரிவித்துள்ளனர். அவருக்கு அங்கேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பும் மணிரத்னத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்துஅப்பல்லோவில் சிகிச்சை பெற்றார். தற்போது இரண்டாவது முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

கால் முறிவு ஏற்பட்ட விவேக் ஓபராய் பிர்லா மருத்துவமனையில் இருந்து இன்று மும்பைக்குக் கொண்டுசெல்லப்படுகிறார். இன்று அவருக்கு அறுவைச் சிகிச்சை நடக்கவுள்ளது. இவர் தான் ஐஸ்வர்யா ராயின் புதியகாதலர் என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான் கானை வெட்டிவிட்டுவிட்டு இப்போது ஐஸ்வர்யா இவருடன் தான்சுற்றி வருகிறார்.

ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில் படப் பிடிப்பில் கார் மோதி கால் உடைந்தது. அப்போது அவருக்கு அறுவை சிகிச்சைசெய்த அதே மருத்துவமனையில் தான் விவேக் ஓபராய்க்கும் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது.

தமிழில் தான் முதலில் இந்தப் படத்தை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். உயிரெழுத்து என்ற தலைப்பிலானஇப் படத்துக்காக மீரா ஜாஸ்மீன் கூட புக் செய்யப்பட்டார். ஆனால், பிற இளம் ஹீரோக்களின் கால்ஷீல்கிடைக்கததால் அதன் இந்திப் பதிப்பை முதலில் எடுக்க முடிவு செய்து இறங்கினார் மணிரத்னம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil