For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சூரி வீட்டு விஷேசத்தில் திருட்டு போன நகை மீட்பு... என்ன நடந்தது

  |

  மதுரை : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் மிகச் சிறிய கேரக்டரில் நடித்ததில் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர். கிட்டதட்ட 20 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து உச்சம் தொட்டுள்ளார்.

  Recommended Video

  நடிகர் சூரி இல்ல திருமண விழா.. நகைகளை திருடி 'விபூதி' அடித்த இளைஞர்..

  அஜித் நடித்த ரெட், ஜீ, மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி, பிரஷாந்த் நடித்த வின்னர், பரத் நடித்த காதல், ஜெயம் ரவி நடித்த தீபாவளி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் சூரியின் முகம் வெளியில் தெரியவில்லை. அவரின் கேரக்டர்களும் பேசப்படவில்லை.

  பரோட்டா சூரி

  பரோட்டா சூரி

  2009 ல் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படம் தான் சூரியை காமெடியனாக அடையாளம் காட்டியது. அதில் பரோட்டா சாப்பிடும் போட்டியில், ஓட்டல் கடைக்காரரையே கதற விடுவார் சூரி. எல்லா கோட்டையும் அழி. முதல்ல இருந்து போடு என சூரி பேசும் வசனம் மிக பிரபலம். இந்த படத்திற்கு பிறகு பரோட்டா சூரி என அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். பிறகு படிப்படியாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

  ஹீரோவான சூரி

  ஹீரோவான சூரி

  தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த, சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் காமெடி ரோலில் நடித்து வருகிறார். அதே சமயம் டைரக்டர் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார். அதுவும் போலீஸ் வேடத்தில். இதே படத்தில் நக்சலைட்டாக மற்றொரு முக்கிய ரோலில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

  அண்ணன் மகள் திருமணம்

  அண்ணன் மகள் திருமணம்

  சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் தனது குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர் சூரி. அதில் அம்மா மற்றும் குழந்தைகள் மீது தனி பாசம் வைத்துள்ளார். கடந்த வாரம் சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகளுக்கு மதுரையில் திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவல் காலம் என்பதால் மிக குறைந்த அளவிலான நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர்.

  வாழ்த்திய டாப் ஹீரோக்கள்

  வாழ்த்திய டாப் ஹீரோக்கள்

  திரையுலகை சேர்ந்த விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விமல் உள்ளிட்ட சூரியின் நெருங்கிய நண்பர்களான சிலர் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றனர். இந்த திருமணத்தின் போது நடிகர்கள் சிலர் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் கூட இணையத்தில் வெளியாகி, வைரலாகின.

  திருட்டு போன நகை

  திருட்டு போன நகை

  இந்நிலையில் இந்த திருமண விழாவில், திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மணமகள் அறையில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளன. இவற்றின் மதிப்பு 2 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. தகவல் தெரிந்து நகையை தேடி போது, எங்கும் கிடைக்கவில்லை. திருமண விழாவில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து விட்டதே என சூரி குடும்பத்தினர் அதிர்ச்சி கலந்த கவலையில் இருந்தனர்.

   போலீசில் புகார்

  போலீசில் புகார்

  திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் முதலில் சூரியின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுக்காமல் விட்டு விட்டனர். பிறகு குடும்பத்துடன் நன்கு கலந்து ஆலோசித்த பிறகு, மதுரை - கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். சூரி குடும்பத்தினரின் புகாரைத் தொடர்ந்து, தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் திருமணத்திற்கு உறவினரை போல் வந்த நபர் ஒருவர் நகையை திருடியது கண்டுப்பிடிக்கப்பட்டது. அவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.

  English summary
  Last week soori's brother muthuramalingam's daughter marriage held in madurai. in this wedding function, jewels from bride room had missed. now soori family filed police complaint. After police investigation, jewels recovered from unknown person who theft jewels. police also arrested him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X