»   »  'குண்டக்க மண்டக்க' நடிகரின் அலுவலகத்தில் விலைமதிப்புமிக்க பொருட்கள் கொள்ளை!

'குண்டக்க மண்டக்க' நடிகரின் அலுவலகத்தில் விலைமதிப்புமிக்க பொருட்கள் கொள்ளை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பார்த்திபனின் அலுவலகத்தில் லாக்கர் உடைக்கப்பட்டு கொள்ளை- வீடியோ

சென்னை : நடிகரும், இயக்குநருமான ரா.பார்த்திபனின் திருவான்மியூர் அலுவலகத்தில் லாக்கர் உடைக்கப்பட்டு விலை மதிப்புமிக்க பொருட்கள், பதக்கங்கள், விருதுகள் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

நடிகர் பார்த்திபன் தற்போது சென்னைக்கு வெளியே மரக்காணத்தில் வசித்து வருகிறார். சென்னை திருவான்மியூர் காமராஜர் நகரில் இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும் பார்த்திபன் வீட்டின் ஒரு பகுதியை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார்.

Robbery in Parthibans thiruvanmiyur office

நேற்று காலை, வழக்கம்போல அலுவலகத்தைச் சுத்தம் செய்ய வந்த பெண், பூட்டு உடைக்கப்பட்டு அலுவலகத்தின் கதவு திறக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக பார்த்திபனின் மேனேஜருக்கு தெரியப்படுத்த அவர் வந்து கொள்ளைபோன பொருட்களை பற்றிய தகவல்களைக் கொடுத்து போலீஸில் புகார் செய்திருக்கிறார்.

அதில் அவர், தங்கமுலாம் பூசிய விருதுகள், பதக்கங்கள், கேடயங்கள், நினைவாக வைத்திருந்த சில தங்க பிஸ்கட்டுகள் ஆகியவை கொள்ளை போயுள்ளதாக புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

English summary
Actor and director R. Parthiban's Thiruvanmiyur office locker was broken and valuable items, medals and awards were looted.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X