என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..ரச்சித்தாவிடம் வரம்பு மீறும் ராபர்ட் மாஸ்டர்!
சென்னை : மூக்குத்தி மூக்குத்தி என்று ரச்சித்தா பின்னால் சுத்தி வந்த ராபர்ட் மாஸ்டர் என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று வரம்பு மீறி பேசி உள்ளார்.
சின்னத்திரை சிரியல்களில் நடித்து பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ளார். இவர் சீரியல் மூலம் பிரபலமானதால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
ரச்சித்தா பிக் பாஸ் வீட்டில் மிகவும் ஆக்டிவாகவும் விளையாட்டை புரிந்து விளையாடி வருகிறார். இதனால், இவர் நாமினேஷனில் வந்தாலும், மக்கள் அவரை காப்பாற்றி விடுகிறார்கள்.

காதலில் விழுந்த ராபர்ட் மாஸ்டர்
பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவை பார்த்ததுமே காதலில் விழுந்து விட்டார். ரச்சித்தா எந்த டீமுக்கு சென்றாலும் அந்த டீமில் இவரும் ஐக்கியமாகி விடுகிறார். ரச்சித்தாவை ஓர கண்ணால் பார்ப்பது, துரத்தி துரத்தி சைட் அடிப்பதையே முழுநேர வேலையாக செய்து வருகிறார் ராபர்ட் மாஸ்டர். இது வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் தெரியும் என்பதால் அவர்கள் ராபர்ட் மாஸ்டரை அவ்வப்போது கிண்டலடித்து வருகின்றனர்.

எந்த பீலிங்கும் இல்லை
வீட்டில் கிண்டல் அதிகமானதால் கடுப்பான ரச்சிதா, மாஸ்டர் ரொம்ப ஓவரா போறீங்க, வீட்டில் அனைவரிடமும் அன்பா அழகாக பேசுறீங்க, அப்புறம் என்கிட்ட மட்டும் ஏன் இப்படி பேசுறீங்க நார்மலா இருங்க மாஸ்டர். எனக்கு உங்கள் மீது எந்த பீலிங்கும் வரவில்லை என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார் ரச்சித்தா. எத்தனை முறை அறிவுரை கூறினாலும், ரச்சித்தா பின்னே சுற்றி வருகிறார் ராபர்ட்.

அட்ஜஸ்ட் பண்ணுங்கோ
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் கொஞ்சம் என்னை அட்ஜஸ்ட் பண்ணுங்கோ என்று கூறியுள்ளார். அதில், நடிச்சு தான் ஆகணும்னு இருக்கேளா, அப்போ என்னை பிடிக்காவிட்டாலும் கொஞ்சம் பிடிக்கிற மாதிரி நடித்து அட்ஜஸ்ட் பண்ணுங்கோ, ஏதோ பைத்தியம் சொல்லுதுனு நினைச்சி என்னிடம் நடி என்கிறார் ராபர்ட் மாஸ்டர்.

அது தப்பு மாஸ்டர்
இதற்கு பதிலளித்த ரசித்தா, இது பிக் பாஸ் வீடு, நான் நடிக்க வரவில்லை. இது நடிப்புக்கான மேடை இல்லை என்றார். உடனே குறுக்கிட்ட ராபர்ட் மாஸ்டர், நான் அப்படி சொல்லவில்லை, புடிக்காதவங்க வந்து பேசும்போது ஹாய், ஹலோனு சொல்லலாமே என்று ராபர்ட் கூற, உடனே குறுக்கிட்ட ரச்சிதா அது தப்பு மாஸ்டர், பின்னாடி ஒன்னு, முன்னாடி ஒருவிதமாக இருக்கும் அப்படி பண்ணக்கூடாது என்கிறார்.

வரம்பு மீறுகிறார்
ரச்சித்தா அவர் நிலையில் ஸ்ட்ராங்காக இருக்கிறார். ஆனால், ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இவருக்கு விளக்கம் சொல்லியே ரச்சித்தா நொந்துவிட்டார். ராபர்ட் மாஸ்டரை கமல் தான் கண்டிக்க வேண்டும். ரச்சித்தா ஏற்கனவே கணவரை பிரிந்து மனவேதனையில் இருக்கிறார் ராபர்ட் இப்படி நடந்து கொள்வதால், ரச்சித்தாவின் வாழ்க்கை தான் பாதிக்கும் என பிக் பாஸ் பார்வையாளர்கள் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











