Don't Miss!
- News
அதானி, பிபிசி.. நாடாளுமன்றத்தில் அமளி செய்ய போகும் எதிர்க்கட்சிகள்.. மோடி இன்று முக்கிய மீட்டிங்
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Technology
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அதெல்லாம் சும்மா தான்… நீங்க சீரியஸ்ஸா எடுத்துக் கூடாது: ராபர்ட் மாஸ்டர் உருட்டிய புது உருட்டு
சென்னை: கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 50 நாட்களை கடந்துள்ளது.
சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் முதல் ஆளாக அசல் கோளாறுவை நேரில் சென்று சந்தித்தார்.
அதன்பின்னர் பிக் பாஸ் வீட்டில் தனது அனுபவம் குறித்து வீடியோ வெளியிட்ட ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா குறித்தும் ஓப்பனாக பேசியுள்ளார்.
லூசு மாதிரி பேசாதீங்க..கடும் வாக்குவாதத்தில் அசீம், ஜனனி..ரணகளமான பிக் பாஸ் வீடு!

வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கியது. மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, 50 நாட்களை கடந்துள்ளது. இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறிவிட்ட நிலையில், சென்ற வாரம் ராபர்ட் மாஸ்டரும் எவிக்சன் செய்யப்பட்டார். முதல் இரண்டு வாரங்கள் ஆக்டிவாக இருந்த ராபர்ட் மாஸ்டர், அதன் பின்னர் அப்படியே மந்தமாகிவிட்டார். ஒருகட்டத்தில் அவரே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.

போட்டியாளர்கள் எப்படி எப்படி?
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் முதல் ஆளாக அசல் கோளாறுவை சென்று சந்தித்தார் ராபர்ட் மாஸ்டர். பிக் பாஸ் வீட்டில் அறிமுகமானதில் இருந்தே, ராபர்ட் மாஸ்டருடன் ரொம்பவே நெருங்கி பழகியதில் அசல் கோளாறுவும் ஒருவர். அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் எப்படி என வீடியோ வெளியிட்டுள்ளார் ராபர்ட் மாஸ்டர். வீட்டில் இருக்கும் போதே அசீமிடம் விலகியே இருந்த ராபர்ட் மாஸ்டர், இப்போது வெளியே வந்ததும் அவரை நரி போல தந்திரமாக செயல்படுவதாகவும், விக்ரமன் மற்றவர்களின் குறைகளை பேசியே ஸ்கோர் செய்வதாகவும் கூறியுள்ளார்.

ரச்சிதா பற்றி மாஸ்டர்
பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டருடன் அமுதவாணன், ரச்சிதா, குயின்ஸி மூவருமே மிக நெருக்கமாக பழகி வந்தனர். அதிலும், ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா இடையேயான கெமிஸ்ட்ரி எல்லை மீறி பொங்கியது. சில இடங்களில் இருவரும் கண்களால் மட்டுமே பேசிக் கொண்டனர். ரச்சிதாவும் ராபர்ட் மாஸ்டர் வெளியேறியதை நினைத்து வருத்தத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவுடனான உறவு குறித்தும் தனது இன்ஸ்டா வீடியோவில் பேசியுள்ளார்.

இது தான் செம்ம உருட்டு
ரச்சிதாவுடன் நட்பாக மட்டுமே பழகினேன், எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மட்டுமே இருந்தது. அதை நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது என பேசியுள்ளார். ராபர்ட் மாஸ்டரின் இந்த பதில் நம்புற மாதிரியா இருக்கு என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டரிடம் பேசிய கமல், "உங்கள் மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்தேன், கடைசி வர போட்டியில் இருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.