ராபர்ட் மாஸ்டர் ஒரு பச்சா..உடைத்து பேசிய ரச்சிதா..அட இதற்கு பின்னால் இவ்வளவு இருக்கா?
சென்னை: ரஞ்சிதா பின்னால் திரியும் ராபர்ட் மாஸ்டர் பற்றி ஷிவின் கேட்டதற்கு ரச்சிதா பதில் அளித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் முதல் மரியாதை காதல் என ராபர்ட் மாஸ்டரை மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.
ரச்சிதாவின் பதில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் பல விஷயங்களை வெளிப்படையாக காட்டியுள்ளது.

பிக்பாஸ் சீசன்களும் டைம்பாஸ் காதல்களும்
பிக் பாஸ் வீட்டில் பங்கேற்கும் போட்டியாளர்களிடையே ஒவ்வொரு சீசனிலும் சிலருக்கு காதல் வரும், அந்த காதல் பெரிதாக பேசப்படும். பின்னர் அந்த காதலை வைத்து அவர்கள் பல நாட்கள் உள்ளே இருப்பார்கள். அதன் பின்னர் ஒரு நாள் அவர்கள் அவர்களில் ஒருவர் வெளியேறுவார். காதலனை பிரிந்த காதலி புலம்புவதை பார்க்க முடியும். இவர்கள் காதல் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை தான். வெளியே வந்த பின்னர் காணாமல் போய்விடும். இந்த காதலில் விழுபவர்கள் பெரும்பாலும் திருமணம் ஆகாத இளம் வயதினராக இருப்பார்கள். சீசன் 5-ல் மட்டும் அமீர் கணவனை இழந்த பாவனி மீது காதலித்தார். அந்த ஜோடி ஜோடி நம்பர் வரை தொடர்கிறது.

முதுமைக்காதலை சந்திக்கும் பிக்பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசனில் காதல் வருவது இளம் தலைமுறையினருக்கு மட்டும் தான் என்பதை சீசன் 6 உடைத்துள்ளது. இந்த சீசனில் போட்டியாளராக வந்துள்ள ராபர்ட் மாஸ்டர், வந்தது முதல் சரவணன் மீனாட்சி தொடர் நாயகி ரட்சிதா பின்னால் திரிவதை பார்க்க முடிகிறது. முதலில் லேசாக ஆரம்பித்தவர் பின்னர் ரச்சிதா எங்கெல்லாம் செல்கிறாரோ அவரை வைத்த கண் மாறாமல் பார்ப்பதும், பின்னர் பின் தொடர்ந்து செல்வதையும் வாடிக்கையாக வைத்திருந்தார். இது கொஞ்சம் கொஞ்சமாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது.

முதல் மரியாதை பாடலை போட்டு மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்
இதை வைத்து முதல் மரியாதை படத்தில் வரும் பூங்காற்று திரும்புமா என்ற பாடலை போட்டு ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை வெறிக்க வெறிக்க பார்க்கும் காட்சியை போட்டு கிண்டலடித்து வருகின்றனர். அதே நேரம் ரச்சிதாவும் அதை மறுக்கவும் இல்லாமல், ஆதரிக்கவும் இல்லாமல் சிரித்தப்படி கடந்து சென்றுக்கொண்டிருந்தார். கமல் முன்னால் இந்த வாரம் நிருபர் டாஸ்க்கில் தன் காதலை சொல்ல ராபர்ட் மாஸ்டர் முயல் கமல் பஸ்ஸர் அடித்து நிறுத்தினார். இந்த நடவடிக்கை பற்றி நடிகை வனிதா கூரும் பொழுது "உனக்கு இது தேவையா? உன் வயதுக்கு தேவையா? நீ உள்ளே போனால் இந்த வேலையைத்தான் செய்வாய். அதனால் தயவு செய்து காதல் கத்திரிக்காய் எல்லாம் வைத்துக் கொள்ளாமல் ஒழுங்காக போட்டியை விளையாடிட்டு வா என்று சொன்னேன் ஆனால் ராபர்ட் கேட்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

ராபர்ட் மாஸ்டர் ஒரு பச்சா..நான் இதுபோல் பலரை சந்தித்துள்ளேன் -ரச்சிதா
இந்த விவகாரம் குறித்து மாஸ்டர் ரச்சிதா பிரச்னை குறித்து ஷிவின் கேட்க, "உனக்கு இதெல்லாம் தெரியாதா நான் இங்கு விளையாடத்தான் வந்தேன். சக போட்டியாளர் என்ற முறையில் சாதாரணமாக பழகுகிறேன். ஆனால் இதை தவறாக எடுத்துக்கொண்டு அவர் என்னிடம் நெருங்கி வருகிறார். இதை என் வாழ்க்கையில் பலமுறை நான் அனுபவித்துள்ளேன். பல நேரங்களில் என் வாழ்க்கையில் நான் இதை சந்தித்துள்ளேன். அதே பிரச்சினை இந்த வீட்டிலும் தொடர்கிறது. நான் முகத்தில் அடித்தார்போல் பேச முடியாது. நேருக்கு நேர் பார்த்து பழக வேண்டும், திரும்ப திரும்ப ஒரே வீட்டுக்குள் சுற்றி வரவேண்டும், அதற்காக தான் இதை அப்படியே சகித்துக் கொண்டு போகிறேன். ஆனால் நான் இதை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளவில்லை ராபர்ட் மாஸ்டர் எல்லாம் குழந்தை மாதிரி அவரை நான் அப்படித்தான் பார்க்கிறேன் போட்டு உடைத்தார்.

முகத்தில் அடித்தாற்போல் உண்மையைச் சொன்ன ரச்சிதா..அதிர்ச்சியில் மாஸ்டர்
இப்படி பேசிய ரச்சிதா நேற்று அந்த பிரச்சனைக்கு முடிவுகட்டும் விதமாக ராபர்ட் மாஸ்டர் நெருங்கி வந்தபோது நேரடியாக நீங்கள் என் சகோதரர் மாதிரி என்று சொல்லிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராபர்ட் மாஸ்டர் மைனாவை பஞ்சாயத்துக்கு அழைக்க என்னண்ணா என்று கேட்டபடி வந்த மைனா நீ தங்கச்சி என்றால் நேரடியாக சொல் தைரியமாக என ராபர்ட் மாஸ்டர் கேட்க மைனா அவர் கையில் முத்தம் கொடுத்து விட்டு நீ என் அண்ணன் என்று சொல்லி செல்ல நீயும் அதே போல் செய் என ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் சொல்ல எனக்கு அதுபோல் பழக்கம் இல்லை, உங்களை நான் வணங்குகிறேன், நீங்கள் என் சகோதரர் மாதிரி என்று முகத்தில் அடித்தார்போல் சொல்லி ரச்சிதா சென்றுவிட்டார். ராபர்ட் மாஸ்டர் முகத்தில் ஈயாடவில்லை. அமைதியாக இருந்துவிட்டார். இதன்மூலம் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வருமா? அல்லது மாஸ்டர் சோக கீதம் பாடுவாரா? பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











