கமலை குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம்.. கடைசி நிமிஷத்திலும் ஏங்கி இருப்பாருதானே ரோபோ.. காலம் போடும் கணக்கு

சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் தொலைக்காட்சி கதாநாயகர்களில் இவரும் ஒருவர். இப்படி இருக்கையில் அவரது மறைவு என்பது மொத்தமாகவே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்களை கலங்கடித்துள்ளது. இப்படி இருக்கையில் பலரும் அவர் குறித்தும் அவரது மரணம் குறித்தும் பல காரணங்களைக் கூறி வருகிறார்கள்.

அதாவது ரோபோ சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மதுவுக்கு அடிமையாக இருந்தார், அதனால்தான் அவர் 46வது வயதிலேயே காலமாகிவிட்டார் என்றும் கூறுகிறார்கள். மேலும் சிலரோ அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரைதான் மதுவுக்கு அடிமையாக இருந்தார். ஆனால் அவரைப் பொறுத்த வரையில், சில ஆண்டுகளுக்கு முன்னரே அவற்றை எல்லாம் கைவிட்டுவிட்டார். அவரது மறைவுக்கு காரணம், அவர் இளமைக் காலத்தில் தனது உடலில் மெட்டாலிக் பெயிண்ட்டை பூசிக் கொண்டு நிகழ்ச்சிகளில் ரோபோவைப் போல நடித்துக் காட்டியதுதான் என்றும், அந்த பெயிண்ட்டை நீக்க, அவர் மண்ணெய்யைத்தான் பயன்படுத்துவார், அதாவது கிட்டத்தட்ட மண்ணெண்ணெய் குளியல்தான் என்றும் கூறினார்கள்.

Robo Shankar Death He Might Be Think His Last Minute About Acting With Kamalhaasan

அவரது மரணத்திற்கு காரணம் கல்லீரல் செயலிழந்தால் தான் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இப்படி இருக்கும்போது, அவருக்கு மிகவும் பிரியப்பட்ட நடிகர், மனிதர் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் தான். ரோபோ மறைந்துவிட்டார் என்ற தகவல் தெரிந்ததும், தனது எக்ஸ் பக்கத்தில் இன்று நீ, நாளை நான் என்று உருக்கமாக பதிவிட்டார் கமல். கமல்ஹாசன் இப்படி விரைவாக யாருக்கும் இரங்கல் குறிப்பு எழுதியது இல்லை. பல நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்தனர்.

வாழ்நாள் கனவு: ரோபோவின் கடைசி ஆசை, இன்னும் சொல்லப்போனால் அது கடைசி ஆசை இல்லை அவரது வாழ்நாள் ஆசை, பிறவிப் பலன் என்று அவர் எதைக் கூறுவார் என்றால் உலகநாயகன் கமல் ஹாசனுடன் நடிப்பதுதான். அவரது படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை நிறைவேறாமலே ரோபோ சங்கர் இறந்துவிட்டார். ரோபோ சங்கருக்கு இப்படி ஒரு ஆசை உள்ளது என்பது குறித்து கமல்ஹாசனுக்கும் கட்டாயம் தெரியும், கமல்ஹாசன், தனது படத்தில் ரோபோ சங்கருக்கு ஏற்ற கதாபாத்திரம் இருந்தால் அதில் நடிக்க வைக்கலாம் என்று யோசித்து இருக்கலாம். ஆனால் காலம் அதற்கு விடவில்லை.

Robo Shankar Death He Might Be Think His Last Minute About Acting With Kamalhaasan

நிறைவேறாத ஆசை: ரோபோ தனது நிறைவேறாத ஆசையுடனே மறைந்து விட்டார். இதற்கு கமலைக் குற்றம் சொல்ல முடியாது. கமலும் ரோபோவை தனது படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்திருக்கலாம். ரோபோவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இது மட்டும் இல்லாமல், கதறி அழுத அவரது மகள், மனைவி, மருமகன் என குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ரோபோவின் பேரனை அவர் தூக்கும்போது, ரோபோவின் மகள் மேலும் மேலும் கதறி அழுதார். இந்த காட்சிகள் இப்போதும் இணையத்தில் உலா வருகிறது. ரோபோ நாங்கள் உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம், மிஸ் செய்வோம், மற்ற நடிகர்களைப் போலக் கூட பலரும் நடித்து காட்டுகிறார்கள், ஆனால் நீங்கள் ஒரு யுனிக். உங்களின் கள்ளமில்லாத சிரிப்பு எங்களுக்கு என்றைக்கும் நினைவில் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X