அச்சச்சோ.. ரோபோ சங்கர் உயிரிழந்தது எப்படி?.. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை.. 9:05க்கு பிரிந்த உயிர்

சென்னை: நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 18ம் தேதி இரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உயிரை காப்பாற்ற கடைசி நேரத்தில் சிகிச்சை பார்த்த ஜெம் மருத்துவமனை ரோபோ சங்கர் எவ்வாறு உயிரிழந்தார் என்றும் எத்தனை மணிக்கு அவரது உயிர் பிரிந்தது என்றும் மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலமாக தமிழ் சினிமாவுக்கு சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் கிடைத்தது போல அங்கே இருந்து கிடைத்தவர் தான் ரோபோ சங்கர்.

Robo Shankar death report officially released by Gem Hospital

ரோபோ போலவே வேடம் அணிந்துக் கொண்டு இளம் வயதில் வித்தைக் காட்டி வந்த நிலையில், ரோபோ சங்கர் என்றே அழைக்கப்பட்டார். சிவாஜி போல் மிமிக்ரி செய்வதும் நடித்துக் காட்டுவதில் எல்லாம் இவர் கை தேர்ந்தவர். ஆனால், இவ்வளவு சீக்கிரம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழிந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரோபோ சங்கர் மருத்துவ அறிக்கை: ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரைப்பை குடல் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்ட நிலையில், பல உடல் உறுப்புகள் திடீரென செயல் இழந்த நிலையில், அவரை காப்பாற்ற எவ்வளவோ போராடியும் செப்டம்பர் 18ம் தேதி இரவு 9:05 மணியளவில் அவரது உயிர் பிரிந்து விட்டதாக ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்: ஆம்புலன்ஸில் அப்பா ரோபோ சங்கரின் உடலை ஏற்றும் போது இந்திரஜா சங்கர் பதறித் துடித்த காட்சிகளும் அவரை பத்திரமாக பார்த்து ஏற்றுங்கள் என அவர் சொன்ன காட்சிகளும் வெளியாகி மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளன. சமீபத்தில் தான் தனது தந்தை தனக்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்து, தனது குழந்தையையும் கொஞ்சிக் கொண்டிருந்தவர் திடீரென தன்னையும் தனது குடும்பத்தையும் விட்டு பிரிந்து விட்டாரே என கதறி துடித்துவிட்டார்.

இறுதிச்சடங்கு: சென்னை, வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி குப்பத்தில் தான் ரோபோ சங்கரின் வீடு உள்ளது. அவரது உடல் தற்போது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட உள்ளது. நாளை மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X