Robo Shankar: குடி மட்டும் இல்லைன்னா இன்னும் நிறைய சாதித்து இருக்க வேண்டிய ஆளு.. வேதனையில் ரசிகர்கள்

சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் மறைந்த தகவல் கிடைத்ததும் திரைப்பிரபலங்கள் தொடங்கி, சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் உடனே அவரது இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் அவரது மறைவு குறித்து ரசிகர்கள் பலரும் இணையத்தில் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில், " 2012ல நான் வேலை செஞ்சிட்டு இருந்த orphanage home க்கு மாசம் மாசம் donation கொடுப்பாரு. சில தடவை அவர் வீட்டுக்கு போயும் வாங்கிருக்கேன். பல பேருக்கு உதவி செஞ்ச மனுஷனுக்கு இப்படி ஒரு முடிவா" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், " நகைச்சுவை கலைஞர் கலைமாமணி ரோபோ சங்கர்க்கு இதய அஞ்சலி. அவரின் நகைச்சுவை உணர்வு எப்போதும் எங்கள் நினைவுகளில் வாழும். ஆன்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

உடைந்த தனுஷ்: எங்கோ ஒரு இடத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன் குடும்பத்தை உழைப்பால் பல தலைமுறைகள் கையை பிடித்து தாண்டி விட்டு, மறைந்தார் என ஒருவரும், ரோபோ சங்கர் உடலுக்கு தனுஷ் இரங்கல் செய்ய வந்த வீடியோவைப் பகிர்ந்து, தனுஷ்க்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கும் ரோபோ சங்கர் அடுத்த லெவல் கொண்டு போனது தனுஷ் தான் மாரி படத்துல அவர் இறப்பு எல்லாரையும் விட தனுஷ்க்கு பெரிய சோகம் என ஒரு ரசிகரும் பகிர்ந்துள்ளார்.

குடி மட்டும் இல்லையினா: மற்றொரு ரசிகரோ, " நல்ல கலைஞன்... குடி மட்டும் இல்லைன்னா இன்னும் நிறைய சாதித்து இருக்க வேண்டிய ஆளு" என்று பதிவிட்டுள்ளார். ரோபோ சங்கரின் காமெடி காட்சியைப் பகிர்ந்து, " நூறு வருசம் ஆனாலும் நின்னு பேசுற காமேடி. இப்படி பல சம்பவம் பண்ண்விங்கனு எதிர்பார்த்தோம்" என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ, " ரோபோ சங்கர் நம்ம சின்ன‌ வயசுலேந்து பார்க்க பார்க்க நம் கண் முன்னே தன்னோட உழைப்பு, விடாமுயற்சியால வளர்ந்த கலைஞர். உடல் முழுக்க பெயிண்ட் பூசி ரோபோ மாதிரி perform பண்ணி, நகைச்சுவை கலைஞர், நடிகர்னு உயர்ந்தவர். உடல்நலம் ரொம்பவே முக்கியம் 46லாம் போற வயசே இல்ல" என்று பதிவிட்டுள்ளார்.

Robo Shankar Demise Fans And Netizens Shares Condolence They Mentioned Alcohol Main Reason For His Death

பயமா இருக்கு: இன்னொரு ரசிகர், " நல்ல கலைஞன்ம், அருமையான கலைஞன், திறமையான கலைஞன், இவரைப் பார்த்து சிறுவயதில் பள்ளியிலும் கல்லூரிகளும் மிமிக்ரி பண்ணனும்னு என்னைப் போல பலருக்கும் தூண்டுதலா இருந்தவர். கலக்கப்போவது யாரு , அது இது எது ரோபோசங்கர் trademark " என்று பதிவிட்டுள்ளார். " வாழ்க்கையை கணிக்கவே முடியாது. 46 வயசுல இப்படி நடக்குறத எல்லாம் பார்த்தா பயமா இருக்கு. அது இது எது எபிசோட் ல Template Screenshot எடுக்க போனா, மொத்த எபிசோட்டையும் உக்கார்ந்து பார்க்க வச்சுருவாரு மனுஷன். மிஸ் யூ சார் " என்று இன்னொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். ரோபோ சங்கரின் மறைவுக்கு மொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்தும் அஞ்சலி செலுத்தியும், அவரது நகைச்சுவைகளை நினைவு கூர்ந்தும் வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X