Robo Shankar: சிரிக்க வச்சவங்களாம்.. இப்படி அழ வைக்கிறாங்களே.. அய்யோ 46 வயசெல்லாம் சாகுற வயசா
சென்னை: அம்பானி எப்படி தனது மகனுக்கு பார்த்து பார்த்து திருமணம் செய்தாரோ தனது சக்திக்கு மிஞ்சி நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரும் தனது மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தினார். சமீபத்தில் இந்திரஜாவுக்கு பிறந்த ஆண் குழந்தையை ஆஹா.. எனக்கு பேரன் பொறந்துட்டான் என சந்தோஷமாக துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த ரோபோ சங்கர் இப்படி திடீரென நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்து விடுவார் என கனவிலும் நினைக்கவில்லை என சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் துடி துடித்துப் போயுள்ளனர்.
ரோபோ சங்கரின் மறைவு அவரது மனைவி மற்றும் மகள் இந்திரஜா சங்கரை வெகுவாக பாதித்துள்ளது. எப்படியாவது அப்பா ஐசியூவில் இருந்து திரும்பி நலமாக வந்து விடுவார் என நினைத்த இந்திரஜா சங்கர் அப்பாவின் மறைவை அறிந்து அப்படியே இடிந்து போய் விட்டார்.

வெறும் 46 வயதெல்லாம் சாகுற வயசா என சோஷியல் மீடியாவில் பல பிரபலங்களும் ரோபோ சங்கர் மறைவு செய்தியை அறிந்து கண்ணீர் சிந்தி வருகின்றனர்.
ரோபோ சங்கர் காலமானார்: திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் ஆரம்பத்தில் நார்மல் வார்டில் தான் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் திடீரென ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டபோதே குடும்பத்தினர் பதறிப்போய் விட்டனர். செப்டம்பர் 18ம் தேதி இரவு 9.05 மணியளவில் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என ஜெம் மருத்துவமனை தெரிவித்தது. நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் 1978ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மதுரையில் பிறந்தார். 46 வயதே ஆகும் நிலையில், அவரது திடீர் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிரிக்க வைத்தவர்கள் எல்லாம் அழ வைக்கிறாங்களே: காமெடி ஜாம்பவான் விவேக்கின் மரணத்தில் இருந்து தொடர்ந்து ஏகப்பட்ட நகைச்சுவை கலைஞர்கள் வரிசையாக உயிரிழந்து வருவது அதுவும் குறைந்த வயதில் மரணித்து வருவது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய சாபக்கேடாக மாறியுள்ளது. மயில்சாமி, மனோபாலா, பாண்டு, மதன் பாப் என வரிசையாக பல நகைச்சுவை நடிகர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டார்களே என ரசிகர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். இந்நிலையில், ரசிகர்களை மீண்டும் அழ வைத்து விட்டார் ரோபோ சங்கர்.
உடல் நலனில் கவனம் தேவை: ஹீரோக்களை போல காமெடி நடிகர்கள் உள்ளிட்ட மற்ற சினிமா கலைஞர்களும் தங்களது உடல் நலனில் தீவிர அக்கறையை செலுத்த வேண்டும் என்றும் அதை தவறவிட்டால் தேவையற்ற கஷ்டங்களும் இழப்புகளும் வந்து சேரும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரோபோ சங்கரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என பலரும் ஆழ்ந்த இரங்கல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











