நாளை பேரனுக்கு காதுகுத்த பிளான் பண்ண ரோபோ சங்கர்.. அதுக்குள்ள இப்படியா?.. உச்சக்கட்ட சோகம்
சென்னை: ரோபோ சங்கர் உடல்நல குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மனைவியும், மகளும் கதறி துடித்துக்கொண்டிருக்கிறார்கள். சங்கரின் இறுதி சடங்குகள் இன்று மாலையே நடக்கும் என்று கருதப்படுகிறது. 46 வயதான அவர் இவ்வளவு விரைவில் போயிருக்க வேண்டாமென்று பலரும் சோகத்துடன் கூறிவருகிறார்கள்.
தனியார் சேனல் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரது மத்தியிலும் புகழடைந்தவர் ரோபோ சங்கர். அந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபல்யத்தையும் பெயரையும் சரியாக பயன்படுத்துவதற்கான காலம் அவருக்கு தனுஷ் மூலம் கிடைத்தது. தான் ஹீரோவாக நடித்த மாரி படத்தில் ரோபோ சங்கருக்கு முக்கியமான ரோல் ஒன்றை கொடுத்தார். சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தில் தோன்றி தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. பிஸியான நடிகராக மாறிவிட்டார்.
தப்பித்து வந்த ரோபோ சங்கர்: நல்லபடியாக அவரது வாழ்க்கை போய்க்கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதீதமாக மது குடித்ததால் அவருக்கு கல்லீரலில் பிரச்னை ஏற்பட்டது. ஒருவழியாக சிகிச்சை எடுத்து மரணத்திலிருந்து தப்பித்து வந்தார் அவர். மறு பிறப்பு எடுத்தார் என்றே சொல்ல வேண்டும். அவரும் அதனை சில பேட்டிகளில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. முழுவதுமாக குடியை நிறுத்தி தனது கரியரில் முழு கவனம் செலுத்தினார்.

மீண்டும் பிரச்னை: இனி வாழ்க்கையில் பிரச்னை இல்லை என்று நினைத்திருந்த சூழலில்; நேற்று மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் பதறிய குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அத்தனை வகையான சிகிச்சைகளையும் அளித்த சங்கரை காப்பாற்ற நினைத்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சினேகன் அஞ்சலி: அவரது உடல் வளசரவாக்கத்தில் இருக்கும் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். அந்தவகையில் பிரபல பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரோபோ சங்கர் ஏறிய முதல் மேடையிலிருந்து அவருடன் நான் இருந்திருக்கிறேன். எந்த மேடை என்றாலும் அதை தனக்குரியதாக மாற்றிக்கொள்வார்.
நாளை மறுநாள்: நாளை தனது பேரனுக்கு காது குத்த ஏற்பாடு செய்திருந்தர். தனது உடல்நிலையை சரியாக அவர் கவனித்துக்கொள்ளவில்லை என என்னை போல் பல நண்பர்கள் அவரிடம் கவலைப்பட்டிருக்கிறோம். இந்த இடத்துக்குக்கூட போராடித்தான் அவரை கொண்டு வந்தோம். இருந்தபோதும் மனம் சொன்னதை மனம் சொன்னதை மட்டுமே கேட்டு செயல்பட்டார். அதனால் நம்மை விட்டு சென்றுவிட்டார். இந்த இழப்பிலிருந்து எப்படி வெளியே வரப்போகிறோம் என தெரியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











