»   »  'தல'யை பார்க்கப் போறேன், சேர்ந்து நடிக்கப் போறேன்: துள்ளிக் குதிக்கும் ரோபோ ஷங்கர்

'தல'யை பார்க்கப் போறேன், சேர்ந்து நடிக்கப் போறேன்: துள்ளிக் குதிக்கும் ரோபோ ஷங்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்துடன் இணையும் காமெடி ஆக்டர்!- வீடியோ

சென்னை: அஜீத்தை பார்க்கும் ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கிறார் ரோபோ ஷங்கர்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விசுவாசம். படப்பிடிப்பு தள்ளித் தள்ளி வைக்கப்பட்டு ஒரு வழியாக இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் புதிதாக ரோபோ சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சந்திப்பு

சந்திப்பு

ரோபோ சங்கர் அஜீத்தை இதுவரை நேரில் சந்தித்தது இல்லையாம். இந்நிலையில் அவருடன் சேர்ந்து நடிக்கப் போவதை நினைத்து பெருமகிழ்ச்சியில் உள்ளார்.

ரோபோ சங்கர்

ரோபோ சங்கர்

விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும், எப்பொழுது அஜீத்தை பார்ப்போம் என்று ஆவலுடன் உள்ளார் ரோபோ. விசுவாசம் படத்திற்காக அவர் 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

பெரிய படம்

பெரிய படம்

மாரியை அடுத்து தனக்கு கிடைத்த பெரிய பட வாய்ப்பு இது என்கிறார் ரோபோ சங்கர். ரசிகர்களை போன்றே அவரும் படப்பிடிப்பு துவங்கும் நாளை எதிர்பார்த்து காத்துள்ளார்.

நயன்தாரா

நயன்தாரா

விசுவாசம் படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நயன்தாரா தனக்கு மிகவும் பிடித்த அஜீத்துடன் மீண்டும் ஜோடி சேர்கிறார்.

English summary
Robo Shankar is now a part of Ajith starrer Viswasam to be directed by Siva. Robo Shankar is longing to meet Ajith in person. He believes that Viswasam will be an memorable movie in his career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil