Don't Miss!
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- News
டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வடிவேல் பாலாஜி மரணம்.. 'கடவுள் மேல கொஞ்சம் வெறுப்பும் வருது..' ரோபோ சங்கர் உருக்கம்!
சென்னை: வடிவேல் பாலாஜியின் மரணச் செய்தியை கேட்டதும் கடவுள் மீது வெறுப்பு வருகிறது என்று நடிகர் ரோபா சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர், பாலாஜி. வடிவேலு போலவே, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கியவர்.
அதனாலேயே அவர் பெயருடன் 'வடிவேலு' இணைந்துகொண்டது. நகைச்சுவை திறனால், தமிழக மக்களை சிரிக்க வைத்தவர் அவர்.
முதல் முறையா அழ வச்சிட்டாரு.. நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி மரணம்.. கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்

சிகிச்சை பலனின்றி
யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா உள்பட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

நடிகர் ரோபோ சங்கர்
இது திரையுலகினர் மற்றும் சின்னத்திரையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிர் பிரிந்த செய்தி கேட்ட பல சினிமா பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ரோபா சங்கர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

முக்கியமான கலைஞன்
அன்பு நண்பன் வடிவேலு பாலாஜி கொஞ்ச நேரத்துக்கு முன்னால இறந்து போயிட்டான். வயசு 42 தான். என் கூட 19 வருஷம் மேடையில கலந்துக்கிட்ட கலைஞன். தொலைக்காட்சி நிகழ்சிகளில் முக்கியமான கலைஞன். என்னால இந்த வீடியோ பதிவை கூட பண்ண முடியலை. அதிர்ச்சியான செய்தி

ஒரே ஆளா மேடையில
எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் ஒரே ஆளா மேடையில நின்னு அவங்க கேட்கிற கேள்விக்கு எல்லாம் கவுன்டர் கொடுத்து மக்களை கட்டி போட்டுச் சிரிக்க வைக்கும் அற்புதமான கலைஞன். மரணம் இப்படியெல்லாம் கூட வருமா என்பதை பார்க்கும்போது, கஷ்டமா இருக்கு.

தாங்கவே முடியலை
கொஞ்ச நாளைக்கு முன்னாடி, பிரஷருக்காக ஆஸ்பத்திரில சேர்த்திருந்தாங்க. என் மனைவி போய் பார்த்துட்டு வந்தாங்க. அடுத்த பத்துநாள்ல இப்படி ஒரு செய்தியை கேட்கும்போது தாங்கவே முடியலை. அழகான 2 குழந்தைகள் இருக்கு. என் நண்பன், கிட்டதட்ட 10 நாளா போராடினான். அவர் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

கடவுள் மேல வெறுப்பு
இந்த மாதிரி நேரத்துலதான் கடவுள் மேல கொஞ்சம் வெறுப்பும் வருது. நல்ல கலைஞனுக்கு கூட இப்படி ஒரு கொடூர சாவைக் கொடுக்கிறதா இறைவான்னு கேட்கத் தோணுது. எல்லாருக்கும் பிடித்த கலைஞன் வடிவேல் பாலாஜி. அவன் ஆத்மா சாந்தியடைய எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போம். இவ்வாறு ரோபோ சங்கர் கூறியுள்ளார்.