சங்கரு சீக்கிரம் வந்துடு.. ரோபோ சங்கரின் மனைவியின் கண்ணீர் பதிவு!

சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், விஜய் டிவியில், கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். தனது வித்தியாசமான நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்த ரோபோ சங்கர், பல காமெடி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு புகழ் பெற்றார். அவர் உயிரிழந்து இன்னோடு 30 நாட்கள் ஆனநிலையில் அவரது மனைவி பிரியங்கா உருக்கமான பதிவு ஒன்றை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

பாடிபில்டராக தனது பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர் தனது கடுமையாக உழைப்பாலும், திறமையாலும் தனக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சின்னத்திரையில் கலக்கிய ரோபோ சங்கர், சினிமாவிலும் வாய்ப்பு பெற்று அஜித், தனுஷ், சூர்யா,விஷ்ணு விஷால் என பல முன்னணி நடிகர்களில் படத்தில் நடித்துள்ளார். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் எம்எல்ஏ ஜாக்கெட் என்கிற ரோலில் நடித்து தனது திறமையை நிரூபித்தார்.

Robo Shankar Priyanka
Photo Credit:

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்: நடிகர் ரோபோ சங்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்து, தனது மகள் இந்திரஜாவின் திருமணத்தை நடத்தினார். மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அவர், 'காட்ஸ்ஜில்லா' படத்தின் பூஜையில் கலந்து கொண்டு படப்பிடிப்பில் இருந்த போதுமயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையின் தகவலின்படி, அவரது இரைப்பை மற்றும் குடலில் ஏற்பட்ட ரத்தக் கசிவும், பல உடல் உறுப்புகள் செயலிழந்ததும் காரணமாக அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் உயிரிழந்தார். அவரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வளவசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

சங்கரு சீக்கிரம் வா: ரோபோ சங்கர் உயிரிழந்து இன்னோது 30 நாட்களாகி உள்ள நிலையில், ரோபோ சங்கரின் மனைவி இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், ரோபோ சங்கர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோவில் பேசி இருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரியங்கா, 30 நாளுக்கு பிறகு உன்னுடன் ஒரு காணொளி உரையாடல் & குரல் கேட்கிறேன் சங்கராம்மா. சீக்கிரமா ஷூட்டிங் முடிச்சிட்டு வந்திடும்மா மொசக்குட்டி நட்சத்திரனும் நாங்களும் காத்திருக்கோம்மா. Miss u so much sangaramma என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப்பார்த்த பலர் பிரியங்காவிற்கு ஆறுதல் கூறிள்ளனர். அதே போல சென்னையில் உள்ள குபேரன் கோவிலில் Robotic elephant யானைக்கு ரோபோ சங்கர் என பெயர் வைத்து இருக்கிறார்கள், என் அப்பா மீது இவ்வளவு அன்பு வைத்து இருப்பதற்கு நன்றி என இந்திரஜா வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X