ரோபோ சங்கர் உயிரிழப்பு.. மனைவி பிரியங்கா எடுத்த அதிரடி முடிவு.. யப்பா செம காதல்.. எதையும் மறக்கல

சென்னை: ரோபோ சங்கர் கடந்த மாதம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவர் மறைந்தது அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. கண்டிப்பாக அவர் எடுத்து வைத்திருக்கும் பெயரை அவரது மகள் இந்திரஜா தொடர்ந்து எடுப்பார் என்று பலரும் கூறிவரும் சூழலில்; நடிகர் நாஞ்சில் விஜயன் ரோபோ சங்கரின் மனைவி குறித்து பேசியிருக்கிறார்.

மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் மேடைகளில் தோன்றி தனது திறமையை காண்பித்து பிறகு சின்னத்திரையில் அதை நிரூபித்து; வெள்ளித்திரைக்கு வந்தவர். சேனலில் அவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தபோது அவரை பார்ப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. அதனையடுத்து மாரி படத்திலிருந்து முழு நேர நடிகராக மாறினார். இதற்கு முன்னர் சின்னத்திரையில் எப்படி சிறப்பாக செயல்பட்டிருந்தாரோ அதேபோல்தான் இங்கும் இருந்தார்.

கண்டத்திலிருந்து தப்பித்த ரோபோ: மாரி படத்துக்கு பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்தவும் செய்தார் அவர். இதனால் குறுகிய காலத்திலேயே கோலிவுட்டில் முக்கியமான நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்ந்தார். காமெடி, குணசித்திரம் என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் கலக்குபவர். நிலைமை இப்படி இருக்க சில பழக்கங்களால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக அவரை பல வைத்தியங்களுக்கு அழைத்து சென்று மீட்டு அழைத்து வந்தார்கள்.

Robo Shankar s wife Priyanka wears his Kalaimamani chain after his death
Photo Credit:

உயிரிழந்த ரோபோ சங்கர்: அந்த நோயிலிருந்து மீண்ட சங்கர்; ஒட்டுமொத்தமாக தீய பழக்கங்களிலிருந்து வெளியே வந்தார். மேலும் தனது கரியரில் பெரிய கவனத்தை செலுத்திய அவர்; கடந்த வருடம் தனது மகள் இந்திரஜாவுக்கு கார்த்திக் என்பவருடன் பிரமாண்டமாக திருமணமும் நடத்திவைத்தார். இப்படிப்பட்ட நிலைமையில் அவர் கடந்த மாதம் திடீரென உயிரிழந்தார். ஷூட்டிங்கில் இருந்தபோது ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவர்; மருத்துவமனையில் உயிரை விட்டார்.

கலக்கத்தில் குடும்பம்: அவரது உயிரிழப்பு பல தரப்பினரிடம் பெருத்த சோகத்தை உண்டு செய்தது. இறுதி ஊர்வலத்தின்போது அவரின் மனைவி பிரியங்கா நடனம் ஆடி வழி அனுப்பி வைத்தார். அது ஒருசிலரிடம் விமர்சனத்தை சந்தித்தாலும்; விமர்சித்தவர்கள் ரசிகர்கள் உண்டு இல்லை என்று செய்துவிட்டார்கள். இந்நிலையில் நடிகர் நாஞ்சில் விஜயன் தனியார் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.

நாஞ்சில் விஜயன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நான் பிரியங்கா அக்காவின் அனுமதி இல்லாமல்தான் இதனை நான் சொல்கிறேன். ரோபோ சங்கர் கலைமாமணி பட்டம் வாங்கினார். அதற்காக அவருக்கு ஒரு செயின் கொடுத்தார்கள். அதனை சமீபத்தில் மூன்று லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்திருந்தார்கள். சங்கர் அண்ணன் இறந்ததும் அவரது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அந்த செயினை மீட்டு குடும்பத்திடம் கொடுத்திருக்கிறார்கள். அதனை தனது கழுத்தில் போட்டுக்கொண்ட பிரியங்கா அக்கா இனிமேல் அதுதான் எனது தாலி. எப்போதும் கழற்றமாட்டேன் என கூறியிருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X