Don't Miss!
- News
ஒளவை, முத்துலட்சுமி ரெட்டி.. பெண்களை மையப்படுத்திய தமிழ்நாடு அலங்கார ஊர்தி.. டெல்லியில் கோலாகலம்!
- Finance
Padma Awards 2023: குமார் மங்கலம் பிர்லா முதல் அரீஸ் கம்பட்டா வரையில்.. தொழில்துறையினருக்கு மகுடம்!
- Sports
ஐபிஎல் தொடருக்கு வந்த ஆபத்து.. கடும் அதிருப்தியில் அணி நிர்வாகிகள்.. எப்படி சமாளிக்கும் பிசிசிஐ
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !
சென்னை : இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை திரைப்படமான ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
இத்திரைப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் இயக்குநராகவும் மாறி நீண்டநாள் கனவை நிறைவேற்றி உள்ளார் மாதவன்.
இதில், சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
உயிர்காத்த இசைஞானியின் இசை... நெகிழ்ச்சி சம்பவத்தை பதிவிட்ட துணை நடிகர்

நம்பி நாராயணன்
இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன். கடந்த1994-ஆம் ஆண்டு வேறு நாட்டிற்கு தகவல் கொடுத்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு 1996-ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, 1998ஆம் ஆண்டு இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து நம்பி நாராயணனை விடுதலை செய்தது.

வாழ்க்கை வரலாறு
நம்பி நாராயணனின் வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், அவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தை நம்பி நாராயணன் புத்தமாக எழுதியுள்ளார். இந்த சர்ச்சைக்குரிய கதையை படமாக்க நம்பி நாராயணன் ஒப்புக்கொண்டதை அடுத்து , ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தை மாதவன் இயக்கியும் நடித்தும் வருகிறார்.

ரிலீஸ் தேதி
ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் ஜூலை 1ந் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என மாதவன் அறிவித்துள்ளார். தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 6 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
|
6 மொழிகளில்
6 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை டிரிகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதில் சூர்யா மற்றும் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும், சிம்ரன், மாதவனின் மனைவியாக நடித்துள்ளார். ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.