»   »  அண்ணேன்டா.. தம்பிடா.. தமிழ் சினிமாவைக் கலக்கும் உடன்பிறப்புகள்

அண்ணேன்டா.. தம்பிடா.. தமிழ் சினிமாவைக் கலக்கும் உடன்பிறப்புகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை..! தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை..! இப்டியும் ஒரு அண்ணன் தம்பியா? என பல பேர பாத்துருக்கோம்.

சினிமால வாரிசு நட்சத்திரம் மட்டும் தான் வரணும்னு சொல்லற காலம் போய் இப்போ அண்ணனுக்காக தம்பியும், தம்பிக்காக அண்ணனும் வர ஆரம்பிச்சுட்டங்க....! வரது மட்டுமில்லாம அவங்க தங்களுக்குன்னு ஒரு இடத்தையும் தக்க வச்சுக்கிறாங்க.. அப்படி யாரெல்லாம் வந்துருக்காங்க? வாங்க பாக்கலாம்.

தனுஷ், செல்வராகவன்:

தனுஷ், செல்வராகவன்:

தனுஷ் தன்னுடைய அப்பா இயக்குன படத்துல அறிமுகமாக, பின்னாடியே இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய முதல் படத்தை தன் தம்பியை கொண்டு எடுக்க, இப்போ அண்ணனும் தம்பியும் தங்களுக்குன்னு ஒரு இடத்த தக்க வச்சுகிட்டு கொடி கட்டி பறக்குறாங்க..

எம் ராஜா, ஜெயம் ரவி:

எம் ராஜா, ஜெயம் ரவி:

முதல் இரு படங்களையும் அண்ணனும் தம்பியும் தங்களுடைய கூட்டணியிலே ஆரம்பித்தனர். முதல் இரு படங்களிலே தங்களுக்கென்ற இடத்தை பிடித்துக்கொண்டனர். இவர்களது கூட்டணியோ இல்லை தனித்தனி கூட்டணியோ ஆக மொத்தம் இவர்களுக்கு ஜெயம் தான்.

சூர்யா, கார்த்தி:

சூர்யா, கார்த்தி:

நடிப்பில் தற்போது நல்ல இடத்தை பிடித்து வைத்துள்ள சகோதரர்கள் இவர்களே.. சூர்யா தற்போது 30-க்கும் மேற்பட்ட படங்களிலும், கார்த்தி 10-ற்கு மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இருவரும் சமநிலைகளிலே உள்ளனர்.

கிருஷ்ணா, விஷ்ணுவர்தன்:

கிருஷ்ணா, விஷ்ணுவர்தன்:

அண்ணன் தம்பி வரிசையில் இவர்களும் ஒருவராவர். இவர்களில் ஒருவர் நடிப்பு துறையிலும் மற்றொருவர் இயக்குனராகவும் திரையுலகில் பணிபுரிகின்றார். தற்போது அண்ணன் இயக்க, தம்பி நடிக்க அடடே செம்மையா போகுது போங்க...

வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன்:

வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன்:

தம்பிக்கு மார்க்கெட் இருக்கோ இல்லையோ அண்ணன் படம் இயக்கினால் தம்பிக்கு அதில் ஒரு இடம் கட்டாயம் இருக்கும். அண்ணன் இருக்குற வரைக்கும் தம்பிக்கு எப்போவும் மவுசு குறையாது.

சிலம்பரசன், குறளரசன்:

சிலம்பரசன், குறளரசன்:

குழந்தை நட்சத்திரத்தில் தன் தந்தையின் கையை பிடித்து சினிமாவிற்கு வந்தவர் தற்போது தனது தம்பி கையை பிடித்துகொண்டு இசைத்துறையில் விட்டுள்ளார்.

ஆர்யா, சத்யா:

ஆர்யா, சத்யா:

அறிந்தும் அறியாமலும் மூலம் அறிமுகமாகி தற்போது அனைத்தையும் அறிந்துகொண்டு தன் தம்பியை அறிமுகப்படுத்தியுள்ளார் நடிகர் ஆர்யா. என்னொரு பாசம், தன்னோட தம்பி நடிக்கிற படத்தை தானே தயாரித்துள்ளார் ஆர்யா.

ராகவா லாரன்ஸ், எல்வின்:

ராகவா லாரன்ஸ், எல்வின்:

லேட்டஸ்டாக ராகவா தன் தம்பியையும் நடிக்க தயார்படுத்தி வருகிறார். பாக்கலாம் ராகவா தன் தம்பியை நன்றாக தயார்படுத்தியிருக்கிறார், நடிப்பில் எப்படியோ..?

English summary
There are some brothers who are rocking Tamil cinema like Surya and Karthi, Dhanush and Selvaraghavan. Here is a round up.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil