For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  2கே கிட்ஸின் ராக்ஸ்டார்… பார்ட்டி சாங்ஸின் Whole Sale டீலர்... அனிருத்தின் பிறந்தநாள் இன்று…

  |

  சென்னை: தமிழ்த் திரையுலகில் 2கே கிட்ஸ்களின் ராக் ஸ்டாராக கலக்கி வருபவர் இயக்குநர் அனிருத்.

  தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், 10 ஆண்டுகளில் முன்னணி மியூசிக் கம்போஸராக வளர்ந்துவிட்டார்.

  இந்நிலையில், இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடும் அனிருத்துக்கு திரை பிரபலங்களும் அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  ஜனனிக்கு ரெண்டு ஃபிளாக்.. கிரீனைக் கொடுத்து பிடுங்கிக் கொண்ட ஜிபி முத்து! ஜனனிக்கு ரெண்டு ஃபிளாக்.. கிரீனைக் கொடுத்து பிடுங்கிக் கொண்ட ஜிபி முத்து!

  ஒய் திஸ் கொலவெறி

  ஒய் திஸ் கொலவெறி

  சூப்பர் ஸ்டார் ரஜினி, சூர்யவம்சம் பட சரத்குமார், தேவயானி போன்றோர் ஒரே பாடலில் கோடீஸ்வரராக மாறிவிடுவது போல், நிஜத்திலும் ஒருவர் ஒரே பாட்டில் பிரபலமானார். 3 படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் தான் அது, அனிருத் தான் அந்த நபர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த '3' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அந்தப் படம் பிரபலமாகும் முன்பே 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் பட்டித் தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. அதன்பின்னர் தான் அனிருத் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். 2012ல் தொடங்கிய அவரது இசைப் பயணம், 2022 இப்போது உச்சத்தில் உள்ளது என்றால் அது மிகையாகாது.

  DNA காம்போ

  DNA காம்போ

  அனிருத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் அவருக்கு பெரிதும் சப்போர்ட்டாக இருந்தது தனுஷ் தான். வேலையில்லா பட்டதாரி, மாரி என அடுத்தடுத்து வாய்ப்புகளை கொடுத்து உற்சாகப்படுத்தினார். அதேபோல் அனிருத், சிவகார்த்திகேயன் காம்போவும் மாஸ் ஹிட் கொடுத்தது. தனுஷ் மூலமாகவே அனிருத்துடன் நெருக்கமானார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து முன்னணி இயக்குநர்களான செல்வராகவன், சிறுத்தை சிவா, ஏஆர் முருகதாஸ், மோகன் ராஜா, கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், நெல்சன், விக்னேஷ் சிவன் என பலருடன் கூட்டணி வைத்துள்ளார்.

  குத்துப் பாடல்களின் குடோன்

  குத்துப் பாடல்களின் குடோன்

  அதேபோல், ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி என கோலிவுட்டின் டாப் மோஸ்ட் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார் அனிருத். ஆரம்பத்திலேயே 2கே கிட்ஸ்களின் பல்ஸை சரியாக பிடித்துக்கொண்ட அனிருத், கொண்டாட்ட மனநிலைக்கு தேவையான குத்துப் பாடல்களைப் போட்டு வசியம் செய்துவிட்டார். திருமணம், பிறந்தநாள் பார்ட்டி, காலேஜ் கல்சுரல் ஈவன்ட்ஸ் என எந்தப் பக்கம் திரும்பினாலும், அனிருத்தின் அதிரடி பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துக்கொண்டே இருக்கும். நான் ஸ்டாப்பாக ஆடவேண்டுமானால் அனிருத்தின் ப்ளே லிஸ்ட் தான் இன்றும் பலரது தேர்வாக இருக்கும். அப்படியொரு மசாலா குத்துக்கு சொந்தக்காரர் அனிருத்.

  மெலடி பக்கம் கொஞ்சம்

  மெலடி பக்கம் கொஞ்சம்

  அதேநேரம், அனிருத்தின் மெலடி பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 3 படத்தில் 'கண்ணழகா', நானும் ரவுடி தான் படத்தில் 'நீயும் நானும்', மாஸ்டர் படத்தில் வரும் 'அந்த கண்ண பார்த்தாக்கா', திருச்சிற்றம்பலம் படத்தில் 'மேகம் கருக்காதா' என பல பாடல்கள் அனிருத்தின் மெலடி ஹிட் லிஸ்ட்டில் உள்ளன. முக்கியமாக வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ், எஸ் ஜானகி பாடிய 'அம்மா அம்மா நீ எங்க அம்மா' பாடல், ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. அதேபோல், கத்தி படத்தில் ஜேசுதாஸ் பாடிய 'யார் பெற்ற மகனோ' என்ற பாடல்கள் அனிருத்தின் கிளாஸிக் தன்மையுடன் இருக்கும்.

  பிஜிஎம் மாஸ்டர்

  பிஜிஎம் மாஸ்டர்

  பாடல்களைப் போலவே பின்னணி இசையிலும் தற்போதைய ரசிகர்களின் மனநிலையை புரிந்துகொண்டு இசையமைக்கிறார் அனிருத். கொஞ்சம் மாஸ்ஸான இசை வேண்டும் என்றால் அனிருத் தான் இப்போதைய இயக்குநர்களின் சாய்ஸ். தர்பார், பேட்ட, வேதாளம், மாஸ்டர், பீஸ்ட், விக்ரம் போன்ற படங்களில் அனிருத்தின் பின்னணி இசை ரசிகர்களிடம் மேஜிக் செய்திருந்தது. ஒருபக்கம் அவரது இசை குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் தனக்கான ரூட்டில் சென்றுகொண்டே இருக்கிறார். இதனிடையே அனிருத்தி குரலில் மெலடி பாடல்கள், குத்து பாடல்கள் இரண்டுமே ரசிகர்களை கவர்ந்துள்ளன. மேலும், மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் பாடி வருகிறார். கோலிவுட்டின் நவீன இசையமைப்பாளராக அனிருத் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம் ஆகும்.

  English summary
  Anirudh Ravichander is a music composer and singer who primarily works in Tamil and Telugu films. Anirudh made his debut as a music director in 2012 and has been leading the Tamil film industry for 10 years. He is seen as a celebration of 2K kids by composing music for the films of leading actors like Rajini, Kamal, Vijay, and Ajith. In this case, Anirudh is celebrating his 32nd birthday today.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X